12th Bio Botany 1st Lesson
PURE SCIENCE additional questions
12th Botany 1st lesson Pure Science Book Back Question and Answers. 12th Botany 10th Lesson Additional 2-3,&5Marks. TN 12th Botany Unit 8 Book Back Answers. Tamil Lyrics. TN 12th Samacheer kalvi Guide. HSC Second Year Tamil Medium Biology, Bio Botany All Lesson Bok Answers, also available Additional questions with answer key 2021-22. Based on the Reduced syllabus. https://www.studentsguide360.com/
12th Bio Botany 1st Lesson PURE SCIENCE additional questions
IV. 2 மதிப்பெண்கள்
- தாவரங்கள் நிலைத்து வாழ்வதற்கும்.
- தாவரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்து வாழும் மற்ற எல்லா உயிரினங்களும் தொடர்ந்து நிலைத்து வாழ்வதற்கும் முக்கியமானதாக உள்ளது.
- புதிய பண்புகளை உருவாக்குவதால் பரிணாமத்தில் இனப்பெருக்கம் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
- “வங்கத்தின் அச்சுறுத்தல்” என அழைக்கப்படும் நீர் தாவரம் ஆகாய தாமரை (ஜக்கார்னியா கிராசிப்பஸ்) ஆகும். இது ஒரு வகை களையாகும்.
- இது வேகமாக பரவி நீரில் கலந்துள்ள ஆக்சிஜனை குறைத்து மற்ற நீர்வாழ் உயிரினங்கள் மடிய காரணமாகிறது. எனவே இத்தாவரம் “வங்கத்தின் அச்சுறுத்தல்” என அழைக்கப்படுகிறது.
- ஆஸ்பர்ஜில்லஸ்,
- பெனிசிலியம்
- ஈஸ்ட், ஹைட்ரா
- ஸ்பைரோகைரா
- மார்கான்ஷியா
- பிளனேரியா
- பாக்டீரியா
- கொனிடியம்
- மொட்டு விடுதல்
- துண்டாதல்
- ஜெம்மாஉருவாதல்
- மீளுருவாக்கம்
- இரு பிளவாதல்
- சில தாவரங்களில் ஒரு நுண்வித்தகத்தி லுள்ள நுண் வித்துகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் அமைப்பு பொலினியம் எனப்படும்.
5. உறைகுளிர் பாதுகாப்பு என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் யாது?
- மகரந்தத்துகள்களை நீண்ட காலம் உயிர்ப்புத்தன்மையுடன் பாதுகாக்க திரவ நைட்ரஜன் (-196°c) பயன்படுத்தப்படுகிறது.
- இந்நுட்பம் உறைகுளிர் பாதுகாப்பு எனப்படும்.
- இந்நுட்பம் பொருளாதார முக்கியத்துவமுள்ள பயிர்களின் மகரந்தத்துகள்களை தாவர மேம்பாடு செயல் திட்டங்களுக்காக சேமித்து வைக்க உதவுகிறது.
- தேனீ மகரந்தம் ஒரு இயற்கை பொருளாகும்.
- இதில் அதிக அளவு புரதம், கார்போஹைட்ரேட், மிக குறைவான தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுவதால் கூடுதல் கூட்டப் பொருளாக பயன் படுத்தப்படுகிறது.
- இது மகரந்த மாத்திரைகளாகவும் பாகுநீராகவும் விற்கப்படுகிறது.
- தடகள வீரர்கள் மற்றும் பந்தயக் குதிரைகளின் செயல்பாட்டை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
- தீக்காயத்தினால் ஏற்படும் புண்கள் ஆறுவதற்கு உதவுகிறது.
- ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படுதல்
- மகரந்தச்சேர்க்கை தடுக்கப்படுகிறது கேய்ட்டினோகேமி நடைபெறுகிறது.
- எ.கா. தென்னை மற்றும் பாகற்காய்
- ஆண் மற்றும் பெண் மலர்கள் வெவ்வேறு தாவரங்களில் காணப்படுதல்.
- தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் கேய்ட்டினோகேமி இரண்டும் தடுக்கப்படுகிறது.
- எ.கா. பொராசஸ் மற்றும் பேரீச்சை
- சில தாவரங்களில் ஒரு மலரின் அதே மலரின் சூலக மகரந்தத் துகள் முடியை அடைந்தால் அதனால் முளைக்க இயலாது அல்லது முளைப்பது தடுக்கப் படுகிறது. இதற்கு தன் மலட்டுத் தன்மை அல்லது ஒவ்வாமைத் தன்மை என்று பெயர்.
- இது மரபணுசார் செயல்பாடாகும். எ.கா. அபுட்டிலான், பேசிஃபுளோரா
- இலையில் தழைவழி இனப்பெருக்க உறுப்புகளாகச் செயல்படுகின்றன.
- பெற்றோர் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய தனி தாவரங்களாக வளர்கின்றன.
- இவ்வாறு இலையில் தோன்றும் வேற்றிட மொட்டுகள் இலைவளர் மொட்டுகள் எனப்படும். எ.கா? பிரையோஃபில்லம், சில்லா. பெகோனியா.
- சில்லா ஆற்று மணலில் வளரும் ஒரு குமிழ்தண்டு தாவரம். –
- இத்தாவரத்தில் இலையில் தழைவழி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- இவற்றின் இலைகளின் நுனியில் இலைவளர் மொட்டுகள் தோன்றி, அவை தரையைத் தொட்டவுடன் புது தனி தாவரங்களாக மாறுகின்றன.
- ஒரு வித்திலை தாவர விதையின் முளைக் குருத்தைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு உறை முளைக்குருத்து உறை எனப்படும்
- ஒரு வித்திலை தாவர விதையின் வேர் மூடியை உள்ளடக்கிய முளைவேவரைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு உறை முளைவேர் உறை எனப்படும்.
- இருமடிய வித்தகத்தாரை செல்களாகிய சூல்திசுவிலிருந்தோ அல்லது சூல் உறையிலிருந்தோ நேரடியாக கரு உருவானால் அது வேற்றிட கருநிலை அல்லது வித்தகத்தாவர மொட்டு உருவாதல் எனப்படும்.
- ஏனெனில் கேமீட்டாக தாவர நிலை முழுவதுமாக இதில் காணப் படுவதில்லை. எ.கா. சிட்ரஸ் மற்றும் மாஞ்சிஃபெரா
- ஒரு சில தாவரங்களில் வெளிச்சூலக உறையின் நுனிப்பகுதியில் சூலதுளையைச் சுற்றியுள்ள செல்கள் சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. இவ்வமைப்பு விதைத்துளைமூடி என்று அழைக்கப்படுகின்றன. எ.கா. ரிசினஸ் கம்யூனிஸ்
V.3 மதிப்பெண்கள்
- ஒரு முழு தாவரத்தை உண்டாக்கும் மரபணுசார் திறன் முழு ஆக்குத்திறன் எனப்படும்.
- ஒரு செல்லின் இந்த சிறப்புப் பண்பு தோட்டக்கலை, வனவியல் மற்றும் தாவரப்பெருக்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
- எ.கா.கேரட் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட முதிர்ந்த ஃபுளோயம் பாரன்கைமா செல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தகுந்த ஊடகத்தில் வைத்து தூண்டப்பட்டு, செல் வகுப்பு அடைந்து ஒரு புதிய காரட் தாவரம் உருவாக்கப்படுகிறது.
- கேமீட்டுகள் ஈடுபடாமல் தன்னுடைய சொந்த சிற்றினங்களை பெருக்குவதற்கு உதவும் இனப்பெருக்க முறை பாலிலா இனப்பெருக்கம் எனப்படும். எ.கா. துண்டாதல் – ஸ்பைரோகைரா, பால் இனப்பெருக்கம்:
- ஆண், பெண் கேமீட்டுகளின் உற்பத்தி மற்றும் இணைவு பால் இனப்பெருக்கம் எனப்படும்.
- இதில் கேமீட்டுகளின் உற்பத்தி கேமீட் உருவாக்கம் என்றும், கேமீட்டுகளின் இணைவு கருவுறுதல் என்றும் அழைக்கப்படுகிறது. எ.கா. உயர்தாவரங்களின் விதைகள்.
- மகரந்தப்பை சுவரின் உட்புற அடுக்கு டபீட்டம் ஆகும்.
- டபீட்டத்தின் ஒரு பகுதி மகரந்த அறையை சூழ்ந்துள்ள இணைப்புத் திசுவிலிருந்து உருவாகிறது.
- டபீட்டத்தின் மற்றொரு பகுதி வெளிப்புற சுவர் அடுக்கிலிருந்து உருவாகிறது.
- இரண்டு வெவ்வேறு பகுதிகளிலிருந்து உருவாதலால் இரட்டைத் தோற்ற முடையது என கூறப்படுகிறது.
- மட்ட நிலத்தண்டு & அதன் கணுவின் கோண மொட்டு
- தரையடிக்கிழங்கு
- கிழங்கு – கிழங்கின்கண் (அ) டியூபா.
- குமிழ்த்தண்டு
- ஓடு தண்டு
- வேர் விடும் ஒரு தண்டு
- நீர் ஓடு தண்டு
- தரை கீழ் உந்து தண்டு
- சிறுகுமிழ் மொட்டுக்கள்
- மியூசா பாரடிசியாக்கா (வாழை) ஜிஞ்ஜிஃபெர் அஃபிசினாலே (இஞ்சி) குர்குமா லாங்கா (மஞ்சள்)
- அமோர் போபாலஸ் & கொலகேசியா (கருணை, சேனைகிழங்கு
- சொலானம் டியூபரோசசம் (உருளை)
- அல்லியம்சீபா மற்றும் லில்லியம் (வெங்காய், பூண்டு )
- சென்டெல்லா ஏசியாட்டிகா (வல்லாரை)
- மென்தா (புதினா ) ஃபிரகேரியா
- பிஸ்டியா, ஐக்கார்னியா
- கிரைசான்திமம்
- டயாஸ்காரியா, அகேவ்
- எக்சைன் எனப்படுவது மகரந்தத்துகளின் வெளிப்புற அடுக்கு ஆகும்.
- எக்சைனின் புறப்பரப்பு மென்மையாகவோ அல்லது பலவகை அலங்காரப்பாங்குகளுடன் உள்ளது
- இந்த அலங்காரப் பாங்குகள் தாவரங்களில் தடிவடிவம், சிறு குழியுடைய கரணை போன்ற சிறு புள்ளி போன்ற வடிவில் காணப்படுகிறது.
- இதனால் தாவரங்களை அடையாளம் காணவும் வகைப்படுத்துதலில் பயன்படுகிறது.
- ஒருமலரின் மகரந்தத்துகள் அதே மலரின் சூலக முடியை சென்றடையும் நிகழ்வு தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
- இது இருபால் மலர்களைக் கொண்ட தாவரங்களில் நடைபெறுகிறது.
- புதிய பண்புகள்: புதிய சிற்றனங்கள் மற்றும் புதிய வகைத் தாவரங்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு. எ.கா. மிராபலிஸ் ஜலாபா.
- ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள், வேறொரு மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடையும் நிகழ்வு அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
- இது இருபால் மலர் மற்றும் ஒரு பால் மலர்களைக் கொண்ட தாவரங்களில் நடைபெறுகிறது.
- வேறுபட்ட மரபணுக்கள் கொண்ட தாவரங்களின் கேமீட்டுகள் இணை வதால், புதிய சிற்றினங்கள் மற்றும் புதிய வகை தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன. எ.கா.ஹீலியான்தஸ்
- இத்தாவரத்தின் தரைக்கு மேல் காணப்படும் மலர்கள் பிரகாசமான நிறத்துடன் திறந்தவகை மலர்களைக் கொண்டு பூச்சிகள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
- தரைகீழ் மலர்கள் தரைகீழ் மட்டநிலத் தண்டின் கிளைகளிலிருந்து உருவாகின்றன. இவையோ மந்தமான நிறத்துடன் மூடிய மலர்களைக் கொண்டு தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுகின்றன.
- இவ்வாறாக திறந்தவகை மலர்களில் அயல் மகரந்தச்சேர்க்கையும், மூடிய வகை மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கையும் நடைபெறும். காமிலினா பெங்காலன்ஸிஸ் தாவரத்தின் மகரந்தச் சேர்க்கை சிறப்பு அம்சமாகும்.
- இத்தாவரத்தில் மகரந்தச்சேர்க்கை வௌவால்கள் மூலம் நடைபெறுகிறது. இந்த தாவரத்தில் மகரந்தத்தாளும், சூலக முடியும் மலர் உறைகளைத் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கின்றன.
- மகரந்தத்தாள் கொண்ட மலர்களை வௌவால்கள் மார்புடன் இறுக்கமாக பற்றிக் கொண்டு மலரிலிருந்து தேனை எடுக்கின்றன.
- இச்செயல் காரணமாக வௌவாலின் மார்பில் ஒட்டிக் கொண்டுள்ள எண்ணற்ற மகரந்தத் துகள்கள் அவை பூந்தேனிற்காக மற்றொரு மலரை நாடிச் செல்லும் போது அம்மலரின் சூலக முடியை சென்றடைகிறது.
- இருவிதையிலை தாவர கருவளர்ச்சியின் போது கருமுட்டை குறுக்குவாக்கு பகுப்புற்று மேல் செல் அல்லது நுனிசெல் மற்றும் கீழ் அல்லது அடி செல்லை தருகிறது.
- அடி செல்லில் குறுக்குவாக்கு பகுப்பும், நுனி செல்லில் செங்குத்து பகுப்பும் நடைபெற்று நான்கு செல் முன்கரு உருவாகிறது.
- நுனி செல்லில் ஏற்படும் இரண்டாவது செங்குத்துப் பகுப்பு முதல் செங்குத்து பகுப்பிற்கு நேர்கோணத்தில் நடைபெறுகிறது.
- இதனால் நான்கு செல் நிலை உருவாகிறது. இந்த நான்கு செல் நிலை குவாட்ரண்டு என அழைக்கப்படுகிறது.
10. அலிரோன் திசு என்றால் என்ன? அதன் பயன் யாது?
- இது தானியங்களின் (பார்லி, மக்காச்சோளம்) கருவூண் திசுக்களை சூழ்ந்து காணப்படும் மிகவும் சிறப்படைந்த செல்களால் ஆன திசுசு ஆகும்.
- இது ஒன்று அல்லது ஒருசில அடுக்கு களால் ஆனது. இதன் செல்களில் காணப்படும் துகள்கள் அலிரோன் துகள்கள் எனப்படுகின்றன.
- இவற்றில் ஸ்பீரோசோம்கள் காணப் படுகின்றன.
- விதை முளைத்தலின் போது இச்செல்கள் அமைலேஸ்கள், புரோட்டியேஸ்கள் போன்ற ஒரு சில நீராற்பகுப்பு நொதிகளை சுரக்கின்றன.
- இந்நொதிகள் கருவூண் திசு செல்களிலுள்ள சேமிப்பு உணவுப் பொருட்களைச் செரிக்க உதவுகின்றன.
- இரு விதையிலை தாவர கருவில் சஸ்பென்ஸரின் கீழேயுள்ள செல் ஹைப்போபைஸிஸ் எனப்படும்.
- இச்செல்லில் ஒரு குறுக்கு வாக்கு பகுப்பும் இரண்டு செங்குத்து பகுப்புகளும் (ஒன்றிற்கு ஒன்று நேர்கோணத்தில்) நடைபெற்று எட்டு செல்கள் கொண்ட ஹைப்போபைஸிஸ் உருவாகிறது.
- இந்த எட்டு செல்களும் நான்கு செல்கள் வீதம் இரண்டு அடுக்குகளில் அமைந்துள்ளன.
- மேலடுக்கு வேர்மூடி மற்றும் புறத்தோலைத்தருகிறது.
- இந்நிலையில் கரு இதய வடிவைப் பெறுகிறது.
- ஒரு இருபால் மலர் புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம் என நான்கு வட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மகரந்தத்தாள் வட்டமும், சூலக வட்டமும் இன்றியமையாத பாகங்கள் எனப்படுகின்றன.
- யூக்காவிற்கும், அந்துப்பூச்சிக்கும் (டெஜிகுலா யூக்காசெல்லா) இடையே யான உறவு கட்டாய ஒருங்குயிர் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும். அந்துப்பூச்சி மலரின் சூலகப்பையினை துளையிட்டு முட்டையிடுகிறது. பின்னர் மகரந்தத்துகள்களை சேகரித்து பந்து வடிவில் சூலகமுடியின் உள்ளீடற்ற பகுதி வழியாக உள்ளே தள்ளுகிறது.
- கருவுறுதல் நடைபெற்று விதைகள் உருவாகின்றன. முட்டைப்புழுக்கள் (லார்வாக்கள்) வளரும் விதைகளை உண்ணுகின்றன. உண்ணப்படாத சில விதைகள் தாவரத்தின் பெருக்கத்திற்கு உதவுகின்றது.
- இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த அந்துப்பூச்சிகள் யூக்காவின் மலர்கள் இன்றி உயிர்வாழ இயலாது. இத்தாவரமும் அந்துப்பூச்சிகளின்றி பாலினப் பெருக்கம் செய்ய முடியாது.
12th Bio Botany 1st Lesson PURE SCIENCE additional questions
VI. 5 மதிப்பெண்கள்
- மகரந்தத்துகளில் புரோட்டோபிளாசம் அடர்ந்த சைட்டோபிளாசத்தையும் மையத்தில் அமைந்த உட்கருவையும் புறச்சுவர்களையும் கொண்டுள்ளது.
இன்டைன்:
- இதன் சுவர் உட்புற இன்டைன் (intine) மற்றும் வெளிப்புற எக்சைன் (extine) என இரு அடுக்கு களைக் கொண்டது.
- இன்டைக் பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், செல்லுலோஸ், காலோஸ் மற்றும் புரதங்கள் கொண்டு சீரான மெல்லிய தடிப்புடன் காணப்படும்.
எக்சைன் (வெளிச்சுவர்) :
- எக்சைன் செல்லுலோஸ், ஸ்போரோ பொலினின். போலன்கிட் கொண்டு தடித்த காணப்படும். எக்சைன் சீரற்ற தடிப்புகளுடன் சில பகுதிகளில் மெல்லியதாகக காணப்படும்.
- இப்பகுதிகள் சிறிய வட்ட வடிவில் இருந்தால் வளர்துளைகள் என்றும் சற்று நீண்டு காணப்பட்டால் பிளவுப் பள்ளங்கள் என்றும், அழைக்கப் படுகின்றன.இவை மகரந்தத்துகளின் முளைத்தலுடன் தொடர்புடையவை.
- வளர்துளைப் பகுதியில் ஸ்போரோபொலனின் பொதுவாகக் காணப்படுவதில்லை
- எக்சைனின் புறப்பரப்பு மென்மை யாகவோ அல்லது பலவகை அலங்கார பாங்குகளுடனும் உள்ளது. (தடி வடிவம், சிறு குழியுடைய, கரணை போன்ற சிறு புள்ளி போன்ற)
- இவை தாவரங்களை அடையாளம் கண்டறியவும் வகைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
- மகரந்தத்துகளின் வடிவம் சிற்றினத்திற்கு சிற்றினம் மாறுபடுகிறது. கோளம், நீள்கோணம், கதிர்கோல், மடல், கோண அல்லது பிறை வடிவம் என பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
அளவு :
- மகரந்தத்துக்களின் அளவு 10 மைக்ரோ மீட்டர் (மயோசோடிஸ்) முதல் 200 மைக்ரோ மீட்டர் (குக்கர் பிட்டேசி மற்றும் நிக்டாஜினேசி குடும்பத் தாவரங்கள்) வரை வேறுபடுகின்றன.
ஸ்போரோபொலினின் :
- சுவர்ப்பொருளான ஸ்போரோபொலினின் உருவாக மகரந்தத்துகளின் சைட்டோ பிளாசம் மற்றும் டபீட்டம் பங்களிக்கிறது.இது கரோட்டினாய்டிலிருந்து பெறப்படுகிறது.
- இது இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடையது. அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மை, வீரியமிக்க அமிலம், காரம் மற்றும் நொதிகளின் செயல்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
- எனவே தொல்லுயிர் புதைப்படிவுகளில் மகரந்தத்துகள் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க இதுவே காரணமாகும். மகரந்தப் பையிலி ருந்து சூலக முடி வரையிலான மகரந்தத் துகளின் பயணத்தை இது பாதுகாப்பான தாக்குகிறது.
போலன்கிட்:
- போலன்கிட் உருவாக்கத்தில் டபீட்டம் பங்களிக்கிறது. கரோட்டினாய்டு அல்லது ப்ளேவோனாய்ட் இதற்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது.
- இது மகரந்தத் துகள்களின் புறப்பரப்பில் காணப் படும் பிசுபிசுப்பான பூச்சு கொண்ட எண்ணெய் அடுக்காகும். இது பூச்சிகளைக் கவர்வதுடன் புற ஊதாக்கதிர்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
- சூலக வட்டம் மலரின் பெண் இனப் பெருக்க உறுப்பாகும். சூலகவட்டம் என்ற சொல் மலரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூலக அலகுகளைகக் குறிக்கிறது.
- சூலசு அலகு, சூலகப்பை, சூலகத் தண்டு சூலகமுடி ஆகிய பகுதிகளைக் கொண்டது.
- சூலக அலகு (pistil) சூலக இலையிலிருந்து பெறப்படுகிறது.
- சூலகம் என்ற சொல் சூல்கள் கொண்ட பகுதியைக் குறிக்கிறது.
சூலகமுடி:
- மகரந்தத்துகள்களை ஏற்கும் பரப்பாகும்.
சூலகத்தண்டு:
- சூலகமுடிக்குக் கீழாக காணப்படும் நீண்ட மெல்லிய பகுதி சூலகத் தண்டாகும்.
சூற்பை :
- சூலக அலகின் பருத்த அடிப்பகுதி சூலகமாகும்.
- சூலலொட்டுத்திசுவால் இணைக்கப் பட்டுள்ள சூல்கள் சூலக அறையினுள் அமைந்துள்ளன. மலர்த்தோற்றுவியின் நுனியில் தோன்றும்
- ஆக்குத்திசுவிலிருந்து சூலக அலகு தோன்றுகிறது. இது துரிதமாக வளர்ந்து சூலகம், சூலகத்தண்டு மற்றும் சூலகமுடியாக வேறுபாட்டைகிறது.
- சூற்ப்பையின் சூலொட்டுத்திசுவிலிருந்து சூல்கள் அல்லது பெரு வித்தகங்கள் தோன்றுகின்றன. ஒன்று (நெல், மா) முதல் பல (பப்பாளி, தர்பூசணி, ஆர்க்கிட்கள்) சூல்களைக் கொண்டிருக்கும்.
3. தாவரங்களின் கருப்பையின் அமைப்பை விவரி.
- கடைசி உட்கரு பகுப்பிற்கு பின் செல் குறிப்பிடத்தக்க நீட்சியடைந்து பை போன்ற அமைப்பைத் தருகிறது.
- இதன் தொடர்ச்சியாக கருப்பை செசல் அமைப்பை தருகிறது.
- சூல்துளைப் பகுதியிலுள்ள நான்கு உட்கருக்களில் மூன்று முட்டை சாதனமாக மாறுகின்றன. நான்காவது உட்கரு மைய செல்லின் (centre cell) சைட்டோபிளாசத்தில் தனித்து காணப் பட்டு மேல் துருவ உட்கருவாகிறது. பகுதியிலுள்ள நான்கு உட்கருக்களில்
- சலாசா மூன்று எதிரடிச் செல்களாகவும் (antipodal cells) ஒன்று கீழ்துருவ உட்கருவாகவும் ஆகிறது.
- தாவரங்களுக்கு ஏற்ப இரண்டு துருவ உட்கரு (polar nuclei) இணையாமல் அல்லது இணைந்து இரண்டாம் நிலை உட்கருவாக (secondary nucleus) (மைய செல்லுக்குள்) மாறுகிறது.
- முட்டை சாதனத்தின் (egg apparatus) மையத்தில் ஒரு முட்டை செல்லும் அதன் இரு பக்கங்களிலும் சினர்ஜிட்களும் அமைந்துள்ளன.
- சினர்ஜிட்கள் வேதியீர்ப்பு பொருட்களைச் சுரப்பதினால் மகரந்தக்குழாயை ஈர்க்க உதவுகின்றன.
- சினர்ஜிட்களில் உள்ள நூலிழை சாதனம் சூல்திசுவிலுள்ள ஊட்டம் கருப்பைக்கு உறிஞ்சிக் கடத்துவதற்கு உதவுகிறது.
- மேலும் மகரந்தக் குழாய் முட்டையை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு 7 செல்கள் கொண்ட 8 உட்கரு பெற்ற கருப்பை உருவாகிறது.
4. கருவுறுதலுக்கு பின் மலரின் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
- புல்லி இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்தத் தாள்கள், சூலகத்தண்டு மற்றும் சூலகமுடி
- சூலகம்
- சூல்
- முட்டை
- சூலகக்காம்பு
- சூல்துளை
- சூல்திசு
- சூலக வெளியுறை
- சூலக உள்ளுறை
- சினர்ஜிட் செல்கள்
- இரண்டாம்நிலை உட்கரு
- எதிரடி செல்கள்
கருவுறுதலுக்கு பின் நிகழும் மாற்றங்கள்
- பொதுவாக உதிர்ந்து விடுகின்றன.
- கனி
- விதை
- கருமுட்டை
- விதைக்காம்பு
- விதைத்துளை (CO2 மற்றும் நீர் கடத்த)
- பெரிஸ்பெர்ம்
- விதை வெளியுறை
- விதை உள்ளுறை
- அழிந்துவிடுகின்றன
- கருவூண் திசு
- அழிந்துவிடுகின்றன
5. கருவுறா இனப்பெருக்கம் என்றால் என்ன? அதன் யாவை?
- ஆண்,பெண் கேமீட்கள் இணைவின்றி நடைபெறும் இனப்பெருக்கம் கருவுறா இனப்பெருக்கம்.
- அப்போமிக்ஸிஸ் என்ற சொல் 1908 ஆம் ஆண்டு விங்களர் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. இது வழக்கமாக நடைபெறும் பால் இனப்பெருக்க முறைக்குப் பதிலாக நடைபெறும். ஒருவித இனப்பெருக்கம் ஆகும். இதில் குன்றல் பகுப்பும், கேமீட்களின் இணைவும் நடைபெறுவதில்லை.
- மகேஸ்வரி (1950) கருவுறா இனப் பெருக்கத்தை இரண்டு வகைக்களாக வகைப்படுத்தியுள்ளார். அவை மீளவகை கருவுறா இனப்பெருக்கம் மற்றும் மீளாவகை கருவுறா இனப்பெருக்கம்.
- மீள்வகை கருவுறா இனப்பெருக்கம் (Recurrent apomixis) : இது தழைவழி இனப்பெருக்கத் தையும், பாலிணைவில்லா விதைத்தன்மையை யும் (agamospermy) உள்ளடக்கியது.
- மீளாவகை கருவுறா இனப்பெருக்கம் (Non recurrent apomixis): குன்றல் பகுப்பிற்குப் பின் ஒருமடிய கருப்பை இது உருவாக்கப்பட்டு கருவுறுதல் நடைபெறாமல் கருவாக மாறும் நிகழ்வாகும். மீள்வகை கருவுறா இனப்பெருக்கத்தின் உருகோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தழைவழி இனப்பெருக்கம் :தாவரங்கள் விதை தவிர மற்ற பாகங்கள் மூலம் பெருக்கமடைதல் தழைவழி இனப்பெருக்கம் எனப்படும். குமிழ்மொட்டுகள் இமிபீரியாலிஸ், குமிழ்த்தண்டுகள் – அல்லியம் பிரட்டிலேரியா ஓடு தண்டு – மென்தா அர்வென்சிஸ் (புதினா), தரைகீழ் உந்து தண்டு – கிரைசாந்திமம் (சாமந்தி)
- பாலிணைவில்லா விதைத்தன்மை : இது குன்றல் பகுப்பு மற்றும் கேமீட்டுகளின் இணைவின்றி உருவாகும் கருக்கள் ஆகும்.
- வேற்றிட கருநிலை (Adventive embryony) : இருமடிய வித்தகத்தாவர செல்களாகிய சூலதிசுவிலிருந்தோ அல்லது சூல்உறையிலிருந்தோ நேரடியாக கரு உருவானால் அது வேற்றிட கருநிலை எனப்படும். இது வித்தகத்தாவர மொட்டு உருவாதல் என்றும் அழைக்கப்படும் ஏனெனில் கேமீட்டாக தாவர நிலை முழுவதுமாக இதில் காணப்படுவதில்லை. சிட்ரஸ், மாஞ்சிஃபெரா போன்ற தாவரங்களில் வேற்றிட கருக்கள் உருவாகின்றன.
- உருவாக்க கருவுறாவித்து (Generative apospory) : பெருவித்து தாய் செல் நேரடியாக இருமடிய கருப்பையாக மாறுகிறது. இங்கு வழக்கமாக நடைபெறும் குன்றல் பகுப்பு நடைபெறவில்லை. எ.கா.யூபடோரியம், ஏர்வா
- கருவுறாவித்து (Apospory) : பெருவித்து தாய் செல்லில் வழக்கமாக நடைபெறும் குன்றல் பகுப்பு நடந்து நான்கு பெரு வித்துக்களைத் தருகிறது. பின்னர் இந்த நான்கு பெரு வித்துக்களும் படிப்படியாக மடிகின்றன. சூல்திசு செல் ஒன்று தூண்டப்பட்டு ஒரு இருமடிய கருப்பையாக மாறுகிறது. இந்த வகை கருவுறா வித்து தழைவழி வேற்றிட வித்து (somatic apospory) என்றும் அழைக்கப்படும். எ.கா: ஹிராசியம், பார்த்தீனியம்
7. பெருவித்துருவாக்கம் என்றால் என்ன?
- பெருவித்துருவாக்க வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகள் யாவை? பெருவித்து தாய் செல்லிலிருந்து பெருவித்து உருவாகும் நிகழ்வு பெருவித்துருவாக்கம் (megasporogenesis) எனப்படும்.
- சூல் வளர்ச்சியடையும் போது சூல் திசுவின் புறத்தோலடித்தோல் கீழ் அமைந்துள்ள ஒரு சூல்திசு செல் பெரிதாகி முன்வித்தாக (archesporium) செயல்படுகிறது.
- சில தாவரங்களில் முன்வித்து செல் நேரடியாக பெருவித்து (megaspore) தாய் செல்லாகச் செயல்படுகிறது.
- பிற தாவரங்களில் இவை குறுக்குவாட்டில் பகுப்படைந்து வெளிப்புறத்தில் முதலநிலை புறப்பக்க செல்லையும் (outer primary parietal cell) உட்புறத்தில் முதல்நிலை வித்துருவாக்க செல்லையும் (inner primary sporogeneouscell) உருவாக்கப்படுகிறது
- இந்த புறப்பக்க செல் பகுப்படையாமலோ அல்லது பரிதி மற்றும் ஆரத்திற்கு இணையாக சில பகுப்புகளை அடைந்து முதல்நிலை வித்துருவாக்க செல் சூல்திசுவில் ஆழமாகப் பதிகிறது.
- இந்த முதல்நிலை வித்துருவாக்கச் செல் பெருவித்து தாய் செல்லாகச் செயல்படுகிறது.பெருவித்து தாய் செல் குன்றல் பகுப்பிற் குட்பட்டு நான்கு ஒருமடிய பெருவித்துக் களைத் தருகிறது.
- கருப்பை வளர்ச்சியில் பங்கு பெறும் பெருவித்துகளின் எண்ணிக்கையைப் பொருத்து ஒருபெருவித்துசார் கருப்பை இருபெருவித்துசார் கருப்பை (bisporic) நான்கு பெருவித்துசார் கருப்பை (tetrasporic) என மூன்று அடிப்படை வகையான வளர்ச்சி முறைகள் காணப் படுகின்றன.
- பொதுவாக நான்கு பெருவித்துகள் நேர்கோட்டில் அமைந்திருக்கும். இந்த நான்கு பெருவித்துகளில் பொதுவாக சலாசா பக்கமுள்ள பெருவித்து செயல்படும் பெருவித்தாகிறது. மற்ற மூன்றும் அழிந்துவிடுகின்றன.
- செயல்படும் பெருவித்து பெண் கேமீட்டகத் தாவரம் அல்லது கருப்பையை உருவாக்குகிறது.
- இந்த வகை கருப்பை வளர்ச்சி ஒரு பெருவித்துசார் கருப்பை (எ.கா : பாலிகோனம்) என அழைக்கப்படுகிறது.
- நான்கு பெருவித்துகளில் இருவித்துகள் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் இருபெருவித்துச்சார் கருப்பை வளர்ச்சி எ.கா. அல்லியம் ) எனப்படுகிறது. நான்கு பெருவித்துகளும் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் அது நான்கு பெருவித்துசார் கருப்பை (எ.கா. பெப்பரோமியா) எனப்படும்.