You are currently viewing 12th Botany Lesson 5 Book Back 2 Marks

12th Botany Lesson 5 Book Back 2 Marks

12th Botany Lesson 5 Book Back 2 Marks

12th Botany Lesson 5 Book Back 2 Marks. பாடம் 5. VII. இரண்டு மதிப்பெண் வினாக்கள். 6.பாடம் தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள், 12th Botany Lesson 6 Additional question answers.  12th Standard Botany Tamil Medium guide. Book Bak and Addition question and answers. TN 12th Samacheer kalvi Guide6.பாடம் பகுதி-II கூடுதல் வினாக்கள், பகுதி-II கூடுதல் வினாக்கள்,  6.பாடம்  V.இரண்டு மதிப்பெண் வினாக்கள். HSC Second Year Tamil Medium Biology, Bio Botany All Lesson Bok Answers, also available Additional questions with answer key 2021-22. Based on the Reduced syllabus.

12th Botany Lesson 5 Book Back 2 Marks

12th Botany Lesson 5 Book Back 2 Marks

பாடம் 5. VII. இரண்டு மதிப்பெண் வினாக்கள்

VII. இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1. திசு வளர்ப்பில் ஹேபர்லாண்ட ஆற்றிய பணிகள் யாவை?
  • முழு ஆக்குத்திறன் கருத்தை முன்மொழிந்தார்
  • ஆய்வுக் கூட சோதனை முறையில் தனித்து எடுக்கப்பட்ட தாவரச் செல்கள் (அ) திசுவிலிருந்து முழுத் தாவரத்தை வளர்த்தார்
  • நாஃப்ஸ் உப்புக்கரைசலை முதன் முறையில் பயன்படுத்தினார்.
2.முராஷிகி மற்றும் ஸ்கூஜீம் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக 
  • திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள் A இது திசு வளர்ப்பின மைல்கல்லாகும்
  • அனைத்து வகையான திசு வளர்ப்புகளுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஊடகமாகும்.
3.முதல் சிற்றினங்களுக்கிடையேயான உடல் கலப் பினங்களை உருவாக்கியவர் யார்? குறிப்பு வரைக 
  • கார்லசனும், அவருடைய சகாக்களும் நிக்கோட்டி யான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ் டோர்ஃபி தாவரங்களுக்கிடையேயான முதல் சிற்றினங்களுக்கிடையிலான முதல் உடல் கலப்பினங்களை 1971 இல் உருவாக்கினார்.
4.முழுஆக்குத்திறன் என்றால் என்ன?
  • மரபியல் திறன்களைக் கொண்டுள்ள உயிருள்ள தாவரச் செல்களை ஊட்ட (கரைசல்) ஊடகத்தில் வளர்க்கும் போது அவை முழுத் தனித்தாவரமாக வளர்ச்சியடையும் திறனே, முழு ஆக்குத்திறன் எனப்படும்.
  • இதுவே திசு வளர்ப்பின் அடிப்படையாகும்.
5.நாஃப்ஸ் உப்புக் கரைசலின் கூறுகள் யாவை? 
இது சுக்ரோஸ் கரைசலில் கரைந்துள்ள பல்வேறு உப்புக்கள் யாவை?
  • கால்சியம் குளோரைடு : 3.0 கிராம் >
  • பொட்டாசியம் நைட்ரேட் : 1.0 கிராம்
  • மெக்னீசியம் சல்ஃபேட் : 1.0 கிராம்
  • டைபேசிக் பொட்டாசியம் பாஸ்பேட் : 1.0 கிராம்
IIசுக்ரோஸ் : 50 கிராம்
அயனிகள் நீக்கப்பட்ட நீர் : 1000 மிலி
6.மறுவேறுபாடுறுதல் (Re differentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (De differentiation) வேறுபடுத்துக
மறுவேறுபாடுறுதல்
  • ஏற்கனவே வேறுபாடுற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும்
வேறுபாடிழத்தல்
  • முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறிக் கேலஸ் போன்ற திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி
7.PEG – குறிப்பு வரைக
  • PEG – பாலி எத்திலின் கிளைக்கால்
  • இது ஒரு புரோட்டோபிளாஸ்ட்களை இணைக்கும்
  • இணைவுக் காரணியாக உள்ளது. இவ்வாறு இணைந்த புரோட்டோபிளாஸ்ட்கள் கைபிரிட் எனப்படுகின்றன.
8.அகார் என்றால் என்ன? 
  • இது ஊடகத் தயாரிப்பில் திட நிலைப்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் கடல்பாசிகளி லிருந்து பெறப்படும் ஒரு சிக்கலான மியூசிலேஜ் பாலி சாக்கரைடுகளாகும்
  • ஜெலிடியம்
  • கிராசிலேரியா
  • ஜெலிடியெல்லா எனும் பாசிகளிலிருந்து பெறப் படுகிறது.
9. தன்னழுத்த கலனின் பயன் யாது? 
  • இந்தக் கருவி நீராவியின் மூலம் நுண்ணுயிர் நீக்கம் செய்ய பயன்படுகிறது.
  • 15 psi – (121°C வெப்ப நிலை) வெப்ப நிலையில்
  • 15-30 நிமிடங்களுக்கு உட்படுத்தும் முறையாகும்.
  • கண்ணாடிக் கலன்கள், இடுக்கி, கத்தி அனைத்து உபகரணங்களையும் நுண்ணுயிர் நீக்கம் செய்யும் முறை இதுவேயாகும்.
10. MS ஊடகத்தில் காணப்படும் சிறு மூலக்கூறுகள் யாவை?
1.சோடியம் மாலிப்டேட்
2. குப்பிரிக் சல்பேட்
3.கோபால்ட் குளோரைடு.
11. திசு வளர்ப்பில் உருவாக்கப்படும் சிறு செடிகளை ஏன் வன்மையாக்குதலுக்கு உட்படுத்த வேண்டும்? 
ஆய்வக சோதனை முறையில் கட்டுப்படுத்தப் பட்ட முறையில் ஈரப்பதமான அறையில் வளர்க் கப்பட்ட நாற்றுருக்களை மாறுபடும் இயற்கைச் சூழலான. மண், ஒளி, வெப்பம் ஆகிய வற்றிற்குப் பழக்கப்படுத்துவதே வன்மையாக்குதல் எனப்படும். இதனால் அது இயல்பாக வளரும் திறனை, தகவமைத்துக் கொள்கிறது.
12. பிரிகூறு என்றால் என்ன? 
தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தை அதிக அளவில் வளர் ஊடகத்தில் உருவாக்குவதற்கு தேவைப் படும் தாவரத் திசுவின் கூறு பிரிகூறு எனப்படும்.
13. MS வளர்வூடகத்தின் பல்வேறு கூறுகள் யாவை? 
1. பெரும் ஊட்டப்பொருட்கள்
2. நுண் ஊட்டப்பொருட்கள்
3.சிறிய ஊட்டப்பொருட்கள்
4. இரும்புப் பொருட்கள்
5. வைட்டமின்கள்
6.வளர்ச்சி ஹார்மோன்கள்
இவற்றுடன் திடப்படுத்தும் காரணி அகார். இவை அனைத்தும் குறிப்பிட்ட விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
14. ஒரு தாவர செல்லின் செல்சுவரை எவ்வாறு நீக்கலாம்?
  • தெரிவு செய்யப்பட்ட தாவரத் திசுப்பகுதி (explant) இன் செல்சுவரை நீக்கி புரோட்டோபிளாஸ்டை பிரித்தெடுக்க அதனை வைக்க வேண்டிய கரைசல்.
  1. 0.5% மேசரோசைம் மற்றும் 13% சார்பிட்டாலில் அல்லது மானிட்டாலில் கரைந்துள்ள 2% ஒனோசுகா செல்லுலேஸ் நொதி.
  2. இக்கரைசலில் தாவரத்திசுப்பகுதி தன்டு மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் இவை 25°C வெப்பநிலையில் 5.4 pH நிலையில் இரவு 2. முழுவதும் வைக்க வேண்டும்.
  3. பின் மென்மையாக அசைத்து செல்களைத் தனிமைப்படுத்தும் போது புரோட்டோ பிளாஸ்ட்கள் பெறப்படுகிறது.
  4. பின் இவை 20% சுக்ரோஸ் கரைசலுக்கு மாற்றப் பட்டு உயிர்ப்புத் தன்மை காக்கப்படுகிறது.
  5. பின் மையவிலகலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் செல்சுவரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

15. உறுப்புகளாக்கம் என்றால் என்ன?

கேலஸ் செல்கள் வேறுபாடுகளுக்கு உள்ளாகி உடலக்கருக்களை உருவாக்குகின்றன. இவை கருவுருக்கள் எனப்படும்.
ரைகோஜெனிசிஸ் :
  • இவற்றிலிருந்து வேர் உருவாவது ரைசோ ஜெனிசிஸ் எனப்படும்
காலோஜெனிசிஸ் :
  • இவற்றிலிருந்து தண்டு உருவாவது காலோ ஜெனிசிஸ் எனப்படும்.
16. செயற்கை விதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
தாவரத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக் கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர் தொழில் நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்றவை செயற்கை விதைகளாகும். இவற்றின் மேல் சுக்ரோஸ் மற்றும் சோடியம் ஆல்ஜினேட் போன்ற மந்தமான பொருட்கள் கருவுருக்களின் மீது பூசப்படு கின்றன.
17.இரண்டாம் வளர்சிதை மாற்ற பொருட்களையும் அவை பெறப்படும் தாவரங்களையும் அட்டவணைப்படுத்துக
இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள்

இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள்

தாவரங்கள்

பயன்கள்

 1. டிஜாக்ஸின்
2. கோடின்
3. கேப்சைசின்
4. வின்கிரிஸ்டைன்
5. குவினைன்

 1. டிஜிடாலிஸ் பர்புரியா
2. பப்பாவர்

3. சாம்னிபெரம்
4. கேத்தராந்தஸ்

5. ரோசியஸ்

6. கேப்சிகம் அனுவம்

7. சின்கோனா

8. ஆஃபிசினாலிஸ்

1. இதயத்திற்கு மருந்து

2. வலிநிவாரணி

3. வாதவலியை

4. குணப்படுத்த

5. புற்றுநோய்க்கு

6. எதிர்மருந்து

7. மலேரியா எதிர்மருந்து

18. இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமையின் பல்வேறு கூறுகள் யாவை? இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமை :
இது பிரித்தறிய முடியாத மனித அறிவின் படைப்புகள், பதிப்புரிமம், காப்புரிமம் மற்றும் வணிக முத்திரை ஆகிவற்றை முதன்மையாக உள்ளடக்கியது.
19.பின்வருவனவற்றை வரிவாக்கம் செய் PTC, RCGM, GEAC, ELSI, GMO
1. PTC – Culture) தாவரத்திசு வளர்ப்பு (Plant Tissue
2. RCGM-மரபணு கையாளுதல் ஆய்வுக்குழு(Review Committee on Genetic Manipulation)
3. GEAC – மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுb(Genetic Engineering Approval Committee)
4. ELSI – உயிரி தொழில் நுட்பவியலின் அகன்ற அறநெறி சட்ட மற்றும் சமுதாயம் பிரச்சனை களின் விளைவு (Ethical Legal and Social Implications)
5. GMO – மரபியல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் (Genetically Modified Organism)
20. உறை குளிர் பாதுகாப்பு செயல் பாதுகாப்பான்கள் என்றால் என்ன? 
  • டைமெத்தில் சல்ஃபாக்சைடு. கிளிசரால் (அ) சுக்ரோஸ் ஆகியவை உறை குளிர் பாதுகாப்பு செயல்முறைக்கு முன்பாக சேர்க்கப்படுவதால் இவை தீவிர குளிர் விளைவுகளிலிருந்து செல்கள் (அ) திசுக்களை பாதுகாக்கின்றன.
21. ELSI ? ஆய்விற்கான எங்கிருந்து பண உதவி பெறப்படுகிறது? 
  • நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் மற்றும் US-ன் டிபார்ட்மென்ட் ஆஃப் எனர்ஜியானது.
  • மனித மரபணு தொகைய செயல்திட்டத்தின் A பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு
  • ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
22.உடல் கலப்பினமாக்கல் என்றால் என்ன?
வேறுபட்ட செல்களின் உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட்டை இணைத்துப் பெறப் படுவது சைபிரிட் (cybrid) என அழைக்கப்படுகிறது. இதன் பின்பு உட்கரு இணைவு நடைபெறுகிறது. இந்நிகழ்வானது உடல் கலப்பினமாக்கல் (Somatic hybridization) என அழைக்கப்படும்.
23.கேமீட்டக நகல்கள் வேறுபாடு வரையறு.
கேமீட்டக தாவர மீன் உருவாக்கத்தில் கேமீட்டிலும், கேமீட்டகத் தாவரத்திலும் காணப்படும் வேறுபாடு ஆகும்.
24.உயிரி பாதுகாப்பு என்றால் என்ன?
  • உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் அடிப்படையில் பெரியளவில் இழப்பை தடுப்பது உயிரி பாதுகாப்பு ஆகும்.
  • இதில் சூழ்நிலையியலும் மனித உடல்நலமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

VIII. மூன்று மதிப்பெண் வினாக்கள்

1.PTC – இல் பயன்படும் வளர்வூடகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக 
  • M.S ஊட்ட ஊடகம் – (முராஷிகி மற்றும் ஸ்கூஜ் (1962)
  • பொதுவாக பயன்படுத்தப்படும் ஊடகம் இதில் தகுந்த வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்களுடன் தகுந்த கார்பன் மூலங்களையும் கொண்டுள்ளன.
  • B – 5 ஊடகம் (கேம்போர்க் குழுவினர் (1968))
  • ஒயிட் ஊடகம் (ஒயிட் 1943)
  • நிட்ச் ஊடகம் (நிட்ச் மற்றும் நிட்ச் (1969)
2.கேலஸ் தூண்டப்படுதலை விவரி
I)Inoculation (உட்செலுத்துதல்)
தேர்ந்தெடுக்கப்பட்ட
  • இலை
  • கிழங்கு
  • தண்டு
  • வேர்
  1. 1.2செ.மீ
நோய்க்கிருமி நீக்கப்பட்ட துண்டுகளின் பிரிகூறுகள் ஆக்ஸின் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட
II) Incubation : (அடைகாத்தல்) | 12th Botany Lesson 5 Book Back 2 Marks
இவை 25°C±2°C வெப்ப நிலையில் 12 மணிநேரம் ஒளி மற்றும் இருள் என மாறி மாறி வைக்கப்படும்.
III) Induction of Callus (காலஸ் உருவாக்கம்)
  • பிரிகூறின் மேற்பரப்பில் செல்பிரிதல் தூண்டப்பட்டு – கேலஸ் உருவாகிறது.
  • கேலஸ் என்பது ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு
  • ஊடகத்தில் தாவர செல்கள் (அ) திசுக்களின் முறையற்ற வளர்ச்சி ஆகும்
3.தாவர மீளூருவாக்க வழித்தடத்தை விளக்குக
பிரிகூறிலிருந்து உடல் கருவுருவாக்கம் அல்லது உறுப்புகளாக்கம் மூலம் தாவரங்கள் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது.
4.உடலக்கரு உருவாக்கத்தின் பயன்பாடு எது?
  • இவை திறன் மிக்க நாற்றுருக்களை வழங்கி, பின்னர் வன்மையாக்கத்திற்குப் பின் முழுத்தாவரங்களைக் கொடுக்கிறது.
  • செயற்கை விதைகள் உற்பத்திக்கு பயன்படுகின்றது
  • எ.கா: அல்லியம் சட்டைவம், ஹார்டியம் வல்கேர், ஒரைசா சட்டைவா, சியாமெய்ஸ்
5.உடல்நகல்சார் வேறுபாட்டை, கேமீட்டக நகல்சார் வேறுபாட்டிலிருந்து வேறுபடுத்துக
உடல் நகல் சார் வேறுபாடு
1.ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பிலிருந்து உருவாகும் தாவர மீள் உருவாக்கத்தில் மூலத் தாவரத்தில் இருந்து சில வேறுபாடுகள் காணப்படுகின்றன
2.இலை, தண்டு, வேர், கிழங்கு இனப்பெருக்க வித்து ஆகியவற்றில் காணப்படுகின்றன
கேமீட்டக நகல் சார் வேறுபாடு
1)ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பின் போது கேமீட்களிலிருந்து உருவாகும் கேமீட்டகத் தாவர மீள் உருவாக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன
2)கேமீட்டிலும், கேமீட்டகத் தாவரத்திலும் காணப்படும் வேறுபாடு
6.வைரஸ் அற்ற தாவரங்களைஉருவாக்குவது ஏன் அவசியம்?
  • A வேதிப்பொருட்களைக் கொண்டு பூஞ்சை,பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற நோய்க் கிருமிகளை அழிப்பது எளிது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ்களை அழிப்பது அரிது தாவரங்களுக்கு வைரஸ்களால் உண்டாக்கும் பொருளாதாரச் சேதம் அதிகம்.
  • தண்டு நுனி ஆக்குத் திசு வளர்ப்பு மூலம் வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க இயலும் ஏனெனில் தண்டு நுனியில் வைரஸ் தொற்று காணப்படுவதில்லை.
7.செயற்கை விதைகளின் சிறப்பம்சங்கள் யாவை?
  • எண்ணிக்கை, நேரம், செலவு மில்லியன்கள் எண்ணிக்கையில் / எந்த காலத்திலும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும்.

செய்முறை

  • விரும்பிய பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை இம்முறையில் எளிதாக உருவாக்கலாம்.
தரம்
  • தரமான விரும்பிய பண்புகள் உருவாக்க இயலும் சோதனை செய்ய இயலும்.

சேமிப்பு

  • உறை குளிர் பாதுகாப்பு முறையில், நீண்ட நாட்களுக்கு திறன் மிக்கவையாகச் சேமிக்கலாம்.

உருவொத்த தாவரங்கள் 

  • அதிக எண்ணிக்கையில் உருவொத்த தாவரங்களை உருவாக்கலாம்.
விதையுறாக்காலம்
  • பெரிதாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள்

  • குறுகிய வாழ்க்கை சுழற்சியுடன் கூடிய வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
8. திசு வளர்ப்பின் பயன்பாடுகள் யாவை? 
1. உடலகலப்பினமாதல் மேம்பட்ட கலப்புயிரிகளின் உற்பத்தி (உடலகலப்புயிரியாக்கம்)
2. உறை சூழப்பட்ட கருக்கள் செயற்கை விதைகள் (உடலகலப்புயிரியாக்கம்)
3. ஆக்குத்திசு மற்றும் தண்டு நுனி வளர்ப்பு நோய் எதிர்ப்பு தாவரங்கள் உற்பத்தி செய்தல்
4. தாவரங்கள்
  • களைக்கொல்லி சகிப்புத்தன்மை
  • வெப்ப சகிப்புத்தன்மை
  • அழுத்த சகிப்புத்தன்மை

5.நுண் பெருக்க தொழில்நுட்பம்—-> வருடம் முழுவதும் / குறைந்த காலத்தில் பயிர் / மற்றும்வனத்திற்கு பயன்படும் மரச்சிற்றினங்கள் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் கிடைக் கின்றன.

6. இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்கள்
  • மருந்து உற்பத்தி
  • அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு
  • உணவுத் தொழிற்சாலையில் பயன்படுகின்றன
5.வாழையின் நுண்பெருக்க நெறிமுறைகள் தருக
  • வாழையின் ஆய்வுக்கூட சோதனை முறை நுண் பெருக்கம் (மியூசா சிற்றினம்)
  • வாழையில் நுண் பெருக்கம் வாழையின் ஆய்வுக்கூட சோதனை முறை நுண் பெருக்கம் (மியூசா சிற்றினம்)
  • தரைகீழ் உந்து தண்டின் பறப்பரப்பு 1% சோடியம் ஆக்சி குளோரைடு (NaCl) கொண்டு 30 நிமிடத்திற்கு கிருமி நீக்கம் செய்யப்படுகிறது
  • நுனி ஆக்குத்திசு தனிமைப்படுத்தப்பட்டு பென்சைல் அமினோ பியூரைன் (BAP) 10.0 மிகி ,லி மற்றும் இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA) 1.0 மிகி.லி MS அடிப்படை ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது.
  • 168 நாட்களுக்குள் தண்டு வளர்ச்சி தூண்டப்படுதல்
  • வேர் வளர்ச்சியை தூண்டுவதற்கு கைனடின் 2.0 மிகி ,லி மற்றும் நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) 0.5 மிகி.லி சேர்க்கப்படுகிறது
  • காலநிலை இணக்கப்பாடு செய்தல் (பசுமை குடிலில்)
  • நிழற்பாங்கான குடிலைத் தொடர்ந்து 50% ஒளியில் வன்மையாக்குதல்
  • சீரான மரபியல் தன்மையை சோதித்தல்
  • பயிர் நிலத்திற்கு மாற்றுதல்
10. வைரஸ் அற்ற நுனி ஆக்குத்திசு வளர்ப்பிற்கான நெறிமுறையைத் தருக
  • வைரஸ் அற்ற நுனி ஆக்குத் திசு வளர்ப்பிற்கான செயல்முறைகள்
  • பிரிகூறிலிருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலையில் ஒன்று அல்லது இரண்டு இலை தோற்றுவிகளுடன் கூடிய நுனி ஆக்குத்திசு பிரித்தெடுக்கப்படுகிறது
  • கூடுதலான வளர்ச்சி ஹார்மோன்களுடன் கூடிய 10 மிலி திட MS ஊடகத்தில் ஆய்வுக்கூடசெயற்கை சோதனை வளர்ப்பு செய்யப்படுகிறது
  • 2400 லக்ஸ் சாதாரண ஒளிச்செறிவைத் தொடர்ந்து 2441°C வெப்பநிலையில் மூன்று நாட்களுக்கு இருளில் வளர்ப்பானது பராமரிக்கப்படுகிறது.
  • உறுப்புகள் உருவாக்க செயல்முறைக்கு பிறகு நுனி ஆக்குத்திசு வளர்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட நாற்றுருக்கள் வன்மையாக்க செயலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
  • பயிர் நிலச் சூழலுக்கு மாற்றப்படுகிறது

11. நோய் தடுப்புத் திறனை ஒரு தாவரத்தினுள் புகுத்த சிறந்த பாரம்பரிய பயிர்பெருக்கத்தன்மை எது? விளக்குக.

  • திசு வளர்ப்புமுறை (அ) நுண்பெருக்க முறையே ஒரு தாவரத்தினுள் புகுத்த சிறந்த பாரம்பரியப்பயிர் பெருக்க தன்மையாகும்.
  • இம் முறையில் தெரிவு செய்யப்பட்ட தாவர நுனி ஆக்குத்திசு – செல்களின் பிரிகூறு ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் போது அதில் நோய் தடுப்புத்திறன் பெறப்படுகிறது.
12. காப்புரிமம் அதன் 3 பகுதிகள் யாவை? அதன் 3 பகுதிகளாவன அனுமதி, விவரக்குறிப்பு மற்றும் உரிமைகோருதல் பகுதியாகும். அனுமதி
  • காப்புரிம அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவலகத்தில் நிரப்பப்படுகிறது (வெளியிடப்படுவதில்லை)
  • அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவகலத்தில் நிரப்பப்படுகிறது. ஆனால் வெளியிடப்படுவதில்லை. இவை கையொப்பம் இடப்பட்ட A ஆவணங்களாகும்.
  • உருவாக்குபவர்களுக்குக் கொடுக்கப்படும் காப்புரிமை அனுமதி ஒப்பந்தமாகும். விவரக் குறிப்பு
  • ஒற்றை ஆவணமாக, பொதுமக்களுக்கும் காப்புரிம அலுவலகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இதில் உருவாக்கத்தின் விவரிப்பும் – எவ்வாறு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் காணப்படும். கோருதல் பகுதி
  • உருவாக்கத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி குறிப்பாக வரையறுக்கப்படுகிறது.
  • இந்த நோக்கம் மற்றவர்களால் நடைமுறைப்படுத்த முடியாததாக தடுக்கப்படுகிறது.
13. காப்புரிமம் சார் பொதுவான படிநிலைகள் யாவை?
14. அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன? அதன் கூறுகள் யாவை?
முதல் கட்டம் உள்ளடக்குவது 
  • படைப்புகள் காப்புரிமை & வணிகமுத்திரை
  • உயிர்நுட்பவியல் வணிக உற்பத்திக்கான மாற்றப்பட்ட நுண்ணுயிர்கள், தாவரங்கள் கண்டுபிடிப்பாளர்களுக்கே உரிய சொத்தாகும். இரண்டாம் கட்டம் உள்ளடக்குவது & வணிக ரகசியங்கள் & விளம்பர உரிமைகள் தார்மீக உரிமைகள் மற்றும் & நேர்மையற்ற போட்டிகளுக்கு எதிரான உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இவையனைத்தும் ஒரு நாட்டின் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.
15. GEAC இன் பணிகள் யாது?
GEAC மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு
1. சூழலியல், வனங்கள், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் அமையும் ஒரு மதிப்பீட்டு முதன்மைக் குழு
2. ஒழுங்குப்படுத்துதல் மரபணு மாற்றமடைந்த (GMOs) போன்ற வற்றின் உற்பத்தி பயன்பாடு, இறக்குமதி ஏற்றுமதி சேமிப்பு போன்றவற்றை ஒழுங்கு படுத்துகிறது.
3. மேலும் தீங்கு செய்யும் உயிரிகளையும் பெரிய அளவில் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்க (அ) கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட முக்கிய அமைப்பு.
4. மேலும் சோதனை அடிப்படையில் கள முயற்சி களையும் உள்ளடக்கிய சூழலில் மரபணு மாற்ற மடைந்த உயிரிகளையும், உயிரிப் பொருட் களையும் வெளியிடுவது தொடர்பான செயல் திட்டங்களுக்கும் களமுயற்சிகள் BRI – I, BRI – II & BRI – III என மூன்று கட்டங்களுக்குப் பின்னரே அனுமதியளிக்கிறது.
16. தாவரத்திசு வளர்ப்பிற்கான அடிப்படை வசதிகள் யாவை?
  • கண்ணாடிக் கலன்களை கழுவுவதற்கான வசதி மற்றும் அவற்றை உலர்த்துவதற்கான நுண்ணலை அடுப்பு ஆகிய வசதிகள் இருக்க வேண்டும்.
  • தன்னழுத்தக் கலன் மற்றும் எலக்ட்ரானிய தராசு மற்றும் pH மீட்டருடன் கூடிய வளர்ப்பு ஊடகம் தயாரிப்பதற்கான அறை இருக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை:இது ஒரு சீரடுக்கு காற்றுபாய்வு அமைப்பும், உயர்திறன் துகள் காற்று வடிப்பான் என்றழைக்கப் படும் அழுத்தக் காற்றோட்ட அலகும் உள்ளன.
  • இவற்றின் வேலை நுண்ணுயிர் அற்ற ஒருசூழலை உருவாக்குவதாகும்.
17. மரபணு தொகையை ஆராய்ச்சியில் அறம்சார் பிரச்சினைகள் பற்றி எழுதுக. 
  • தொழிலில் அமர்த்துதல் மற்றும் காப்பீட்டில் மரபணுக்கள் வேறுபாட்டை உள்ளடக்கிய மரபணுசார் தகவல் பயன்பாட்டில் தனிமனித ரகசியத்தையும் நேர்மையையும் செயல்படுத்துதல்.
  • மரபணுசார் சோதனை போன்ற புதிய மரபணுசார் தொழில்நுட்பங்களைச் சிகிச்சைச் சார் மருத்துவ நடைமுறையில் ஒன்றிணைத்தல்.
  • மக்களின் முன் ஒப்புதலுடன் கூடிய மரபணு ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பைச் சார்ந்த அறநெறி சார்பிரச்சனைகள் ஆகும்.

IX. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1.PTC எனப்படும் தாவரத்தின் வளர்ப்பின் மைல்கல்கள் யாவை? (ஏதேனும் 5 மட்டும்) ஹேபர்லேண்ட;(1902) 
  • முழு ஆக்கத்திறன் கருத்து முன்மொழிந்தார்
  • நாஃப்ஸ் உப்புக் கரைசலை பயன்படுத்தியவர்.
  • ஆய்வுக் கூட சோதனை முறையில் தனித்து எடுக்கப்பட்ட செல்களிலிருந்து முழு தாவரத்தை உருவாக்குதல்.

P.R ஒயிட; (1934)

  • நாஃப்ஸ் உப்புக் கரைசலுடன் + 3 வைட்டமின் களான (பைரிடாக்சின், தயமின் மற்றும் நிக்கோட்டினிக் அமிலம்) பயன்படுத்தி வேர் வளர்ப்பை உண்டாக்கினார்.

F.C ஸ்டீவர்ட் (1948)

  • இளநீர் திசு—-> வளர்ப்பு
  • கேரட் பிரிகூறு —->திசு வளர்ப்பு
  • மோரலும் மார்டினும் (1952, 1955) வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளை உருவாக்கினர்.

முராஷிகி மற்றும் ஸ்கூஜீம் (1964) டத்தூரா மகரந்தப்பை ஒற்றை மடியக் கரு

2. திசு வளர்ப்பிற்கான அடிப்படை சூழல்கள் யாவை? 
1. PH – 5.6 to 6 க்குள் இருக்க வேண்டும்
2. வெப்பம் 25°C + 2°C நிலையான வெப்பம் உகந்தது
3. ஈரப்பதம் மற்றும ஒளிச்செறிவு 50-60% ஒப்பு ஈரப்பதமும், தோராயமாக 1000 லக்ஸீம் 16 மணி ஒளிக்காலத்துவம் தேவை
4. காற்றோட்டம் தானியங்கி குலுக்கி மூலம் கொடுக்கப்படுகிறது. இது காற்று வடிகட்டி மூலம் நுண்ணுயிரி நீக்கப் A பட்டு ஊட கத்தில் செலுத்தப்படுகிறது.
3. திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?
கழுவும் & உலர்த்தும் 
  • வசதி கண்ணாடிக் கலன்களைக் கழுவும் & உலர்த்தும் நுண்ணலை அடுக்கு

ஊடகம் தயாரிக்கும் அறை 

  • தன்னழுத்தக்கலன் எலக்ட்ரானிக் தராசு
  • PH மீட்டர்
நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
  • சீரடுக்கு காற்று பாய்வு அமைப்பு
  • உயர்திறன் துகள் காற்று வடிப்பான் (HEPA)
பிற வளர்ப்பு வசதிகள்
  • பிரிகூறு – வளர்ப்புக் குழாயில் பொதிக்கப்பட்டு 22-28°C வெப்பநிலையில், 2400 லக்ஸ் ஒளிச்செறிவில் 8-16 மணி நேர ஒளிக்ககாலத் துவத்திலும் 60% ஈரப்பதத்திலும் வளர்க்கப் படுகிறது.
4.புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக? 
செல்சுவற்றை செல்லின் பிற பகுதிகள் புரோட்டோபிளாஸ்ட் எனப்படும் (செல் சவ்வு சைட்டோபிளாசம் + உட்கரு நுண்ணுறுப்புகள;)

I. படிகள்

அ) புரோட்டோபிளாஸ்ட்டைப் பிரித்தெடுத்தல்
இலைத்திசுவை 0.5% மேசரோசைம் +
13% சார்பிட்டால் (அ) மானிட்டால் கரைந்துள்ள 2% ஒனோசுகா செல்லுலேஸ் நொதியில் முழ்க வைத்தல் pH 5.4
ஆ) அடைகாத்தல்
இரவு முழுவதும் 25°C வெப்பநிலையில் வைத்தல்
இ) Teasing
மென்மையாக செல்களை தனிமைப்படுத்துதல்
ஈ) உயிர்ப்புத்தன்மை நிலைநிறுத்தல்
20% சுக்ரோஸ் கரைசலுக்கு மாற்றப்பட்டு உயிர்ப்புத் தன்மை நிலைநிறுத்தல்
உ) புரோட்டோபிளாஸ்ட் தனிமைப்படுத்துதல்
மையவிலக்கிக்கு உட்பட்டு செல்சுவரிலிருந்து தனிமைப்படுத்துதல்
II.புரோட்டோபிளாஸ்ட்கள் இணைதல் | 12th Botany Lesson 5 Book Back 2 Marks
தகுந்த இணைவுக் காரணியான (PEG) பாலி எத்திலீன் கிளைக்கால் மூலம் நிகழ்கிறது.
பிரித்தெடுக்கப்பட்ட புரோட்டோபிளாஸ்ட் A & B
+ Ca++ அயனி
25% – 30% செறிவுள்ள PEG|

II. புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு

அ) புரோட்டோபிளாஸ்ட் உயிர்ப்புத்திறன் சோதனை 
ஃப்ளூரசின் டை அசிட்டேட்டைக் கொண்டு உயிர்ப்புத்திறன் சோதிக்கப்படுகிறது
ஆ) M.S வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பு
நுண் துளி தட்டு (அ) நுண் துளி வரிசை (array) முறையில் வளர்க்கப்படுதல்
இ)அடைகாத்தல் (Incubation)
25°C வெப்பநிலையில் முதல் 1000 2000லக்ஸ் ஒளிச் செறிவில் வைக்கப்படுகிறது. (24-48) மணிநேரம்
ஈ) செல்சுவர் தோன்றல் (24-48 மணி நேரத்திற்குப் பின்)
உ) செல்பிரிதல் நடத்தல் (2-7 நாட்கள்)
5.உயிரி பாதுகாப்பு என்றால் என்ன? விளக்குக  
  • பரந்துப்பட்ட பல கூறுகளை உள்ளடக்கியதே உயிரி பாதுகாப்பு 
மனித உயிரி தொழில்நுட்ப அறிவின் பயன் பாட்டை, தொழில்நுட்ப கருவிகளை ஆய்வகச் சூழலில் உயிரி பாதுகாப்பு பற்றிய தொடர் மீளாய்வு செய்தல், பின்பற்ற வேண்டிய கடுமை யான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியது.
  • உயிரி பாதுகாப்பு கவனத்தில் கொள்வது
  • உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் பெரிய அளவு இழப்பு தடுப்பு
  • சூழ்நிலை பாதுகாப்பு
  • மனித உடல்நலம் ஆகியவை
  • உயிரி தீங்கு விளைவிக்கும் பொருட்கள் (வேதிப்பொருட்கள், நோய் காரணிகள்) கையாளும் ஆய்வகங்களில் மேற்கொள்வது
  • தொடர்ந்து செயல்படும் தீங்கு மேலாண்மை மதிப்பீடு
  • உயிரி பாதுகாப்பை உறுதி செய்யும் நடை முறைகள் ஆகியவை
  • மனித தவறை முடிந்தவரை தவிர்ப்பது
  • தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் தொடர்ந்து பராமரிப்பது
  • தீங்கு நிகழும் போது விரைந்து செயல்படும் வழி முறைகள்
  • உயிரிபாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தா விடில் ஏற்படும் பாதிப்பு அதிகளவு என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
6. ELSI என்றால் என்ன? மற்றும் உயிர் அறநெறி விளக்குக
Ethical Legal & Social Implication-(உயிரி -அறநெறி – அறம்சார் சட்டப்பூர்வமான மற்றும் சமூக விளைவுகள்) 
  • 1990 – ELSI – HGP 616(BIỂU 6060015 பகுதியாக உருவாக்கப்பட்டது.
  • USன்/நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹெல்த் மற்றும் USன் டிபார்ட்மண்ட் ஆஃப் எனர்ஜி” மனித மரபணு தொகைய செயல்திட்டத்தின் பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளித்தது.
வரையறை
  • உயிரி அறநெறி என்பது மேம்பட்ட உயிரியல் மற்றும் மருத்துவத்தில் காணப்படும் அறம் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய படிப்பாகும்
நோக்கம் (பரந்துப்பட்டது)
அ) நகலாக்கம், மரபணு சிகிச்சை, உயிர் நீட்டிப்பு. வான்வெளி உயிரிகள், இது போன்ற வளர்ச்சிகள். சூழ்நிலை சமநிலை மற்றும் வருங்கால பரிணாமத்தைப் பாதிக்கும் விஷயங்கள் அது மட்டுமல்ல. சூழல் பாதிப்புகளோடு கூடவே சட்டரீதியான பிரச்சனைகள் சமூக நம்பிக்கைகள் ஆகியவற்றை கேள்வி குறியாக்கும்
ஆ) கூடுதலாக மனித உயிர்களையும், அவற்றின் பண்புகளையும், அமைப்புகளையும் மதிக்கும் அறநெறிகள் காப்பதும் முக்கியமானதாகும்.
இ) ஆகவே உயிரி மருத்துவம், அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கு இடையேயான உயர் தொடர்பான அறநெறி சார் பகுத்தறிவு பிரச்சனைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வுக்குட்படுத்துவதும், அறநெறி சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவதும், தறிகெட்ட அறநெறிசார அறிவியலின் அசுர வளர்ச்சிகளைக் வரைமுறைக்குட்படுத்துவதும் இதன் நோக்க மாகும்.
ஈ) பிற உயிர்களை மதிக்கவும், அவற்றின் வாழும் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, பிற உயிர்களும் மானுடமும் இணைந்து வாழ்தலே நலமாகும். என்பதே இதன் மையக்கருத்தாகும்.
7.உயிரி பாதுகாப்பு வலியுறுத்தும் சாத்தியமான ஆபத்துகளும், பாதுகாப்பு அம்சங்களுக்குமான கருத்துக்களும் பற்றிய விவரி
நோயூட்டும் தன்மை
  • இயல்பான மரபணு மாற்றமடைந்த வைரஸ். போன்ற உயிரினங்கள் மனித விலங்கு, தாரவங்களும் ஏற்படுத்தும் நோய் தொற்று
ஒவ்வாமை நச்சுத்தன்மை
  • நுண்ணுயிர் உற்பத்தி தொடர்பான ஒவ்வாமையின் நச்சுத் தன்மை
  • உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு பெற்ற நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கழிவு நீக்கச் பிரச்சனைகள்
  • செலவிடப்பட்ட நுண்ணுயிரி சார் உயிர்திரள் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையில் உருவான கழிவு நீர் சுத்திகரிப்பு – பிரச்சனைகள்
நுண்ணுயிரி தொடர்புடைய பாதுகாப்பு அம்சங்கள்
  • கலப்படம் >தொற்றுதல்>சடுதி மாற்ற செயல்முறை
  • மறுகூட்டிணைவு மரபணுக்களைக் கொண்ட நுண்ணுயிரிகளின் தொழில்சார் பயன்பாடு
8. உயிரி பாதுகாப்பை நிலைநிறுத்த உதவும் நிறுவனங்களின் பெயர் – பணி தருக
  • IBSC Institutional Bio Safety Committe நிறுவனங்கள் அளவில் ஆராய்ச்சி செயல்பாடுகளை உயிரி பாதுகாப்புக்குழு கண்காணித்தல்
  • DBT & RCGM – Department of Bio techonology & Review Committee of Genetic Manipulation (மரபணு கையாளுதல் ஆய்வுக் குழு) ஆய்வகங்களில் மேற்கொள்ளப் படும் ஆபத்தான ஆய்வுச் செயல்களைக் கண்காணித்தல்
  • GEAC-Genetic Engineering Approval Committee. மரபணு மாற்றமடைந்த உயிரியின் பயன்பாட்டையும் அனுமதிக்கும் அதிகாரம், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் மரபுப் பொறியியல் அங்கீகாரக் குழு.

Leave a Reply