You are currently viewing 12th Botany Lesson 6 Additional 2 Marks

12th Botany Lesson 6 Additional 2 Marks

12th Botany Lesson 6 Additional 2 Marks

12th Botany Lesson 6 Additional 2 Marks. 12th Standard Botany Tamil Medium guide. Book Bak and Addition question and answers. TN 12th Samacheer kalvi Guide6.பாடம்  V.இரண்டு மதிப்பெண் வினாக்கள். HSC Second Year Tamil Medium Biology, Bio Botany All Lesson Bok Answers, also available Additional questions with answer key 2021-22. Based on the Reduced syllabus.

12th Botany Book Back & Additional Question - Answers Tamil Medium

6.பாடம்  V.இரண்டு மதிப்பெண் வினாக்கள்

 V.இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.உயிரி நில அமைவு மற்றும் சூழ்நிலை அமைவு என்றால் என்ன?

  • ஒரு குழுமத்தின் சூழலுக்கு உயிரி நில அமைவு என்று பெயர்.
  • ஒரு உயிரினத்தின் வாழிடம் மற்றும் செயல் வாழிடம் ஆகியவற்றை கூட்டாக சூழ்நிலை அமைவு என்று பெயர்.

2.உயிர்மம் என்றால் என்ன? 

  • உயிர்மம் எனப்படுவது பெரிய இயற்கையாக காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் அமைந்த வாழிடம் (எ.கா) காடுகள், தூந்திரா.
3. பசுமை மாறாக் காடுகளுக்கும், ஸ்கிளிரோபில்லம் காடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  • இந்திய மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புல்வெளி சிற்றினங்கள் அமெரிக்காவின் குளிர் பிரதேசப் புலவெளி சிற்றினங்களிலிருந்து வேறுபடுகின்றது. ஆயினும் இவை அனைத்தும் சூழ்நிலையியலில் புல்வெளி, முதல் நிலை உற்பத்தியாளர்களே.
  • வகைப்பாட்டியலில் வேறுபட்ட சிற்றினங்கள் வெவ்வேறு புவிப்பரப்புகளில் ஒரே மாதிரியான வாழிடங்கள் பெற்றிருந்தால் அவற்றைச் சூழ்நிலையியல் சமானங்கள் (Ecological Equivalents) என அழைக்கின்றோம்.

பசுமை மாறாக் காடுகள்

  • இவை ஆண்டு முழுவதும் மழை பெய்யும் பகுதிகளில் காணப்படுகிறது.

ஸ்கிளிரோபில்லஸ் காடுகள்

  • இவை குளிர்காலத்தில் அதிக மழை பெய்யும் கோடைகாலத்தில் குறைவான மழையையும்பெறும் பகுதிகளில் காணப்படுகிறது.

4. விரிவகல தாவரக்கூட்டம் மற்றும் குத்துயர தாவரக் கூட்ட மண்டலம் யாவை?
1.வெப்பமண்டல மழைக்காடுகள்
2.புல்வெளி அல்லது பாலைவனம்
3.இலையுதிர் காடுகள்
4.ஊசியிலைக்காடுகள்
5.துந்திரா பகுதி
6.வெண்பனி

6.யூரிஹாலைன் மற்றும் ஸ்டேனோஹாலைன் ஆகியவற்றை வேறுபடுத்துக.
யூரிஹாலைன்

  1. இவை உப்புத்தன்மை அதிகமான நீரிலும் வாழக்கூடிய உயிரினங்கள்
  2. (எ.கா) கடல் பாசிகள் மற்றும் கடல் வாழ் ஆஞ்சியோ ஸ்பெர்ம்கள்
ஸ்டேனோஹாலைன்

  1. இவை குறைவான உப்புத்தன்மை உள்ள நீரில் மட்டுமே வாழக்கூடிய உயிரினங்கள்.
  2. (எ.கா) கழிமுகத்துவாரத் தாவரங்கள்

7. பசுமை இல்ல விளைவு (அ) ஆல்பிடோ விளைவு என்றால் என்ன?

  • சிறிய துகள்களைக் கொண்ட ஏரோசால்கள் வளி மண்டலத்தினுள் நுழையும் சூரியக் கதிர் வீச்சினை பிரதிபலிக்கின்றன. இது ஆல்பிடோ விளைவு எனப்படுகிறது.

8. தீச்சுட்டிக் காட்டிகள் வரையறு (அ) டெரிஸ் மற்றும் பைரோனிமா தாவரங்கள் தீ சுட்டிகாட்டிகள் எனப்படுகின்றன ஏன்? 

  • டெரிஸ் (பெரணி) மற்றும் பைரோனிமா(பூஞ்சை) தாவரங்கள் எரிந்த மற்றும் தீயினால் அழிந்த பகுதிகளைச் சுட்டி காட்டுகின்றன.எனவே இவை தீச் சுட்டிக்காட்டிகள்.

9.விளிம்பு விளைவு என்றால் என்ன?

  • சில சிற்றினங்கள் இரு வாழ்விடச் சூழலின் விளைவு காரணமாக இடைச்சூழலமைப்பு பகுதியில் காணப்படின் அது விளிம்பு விளைவு எனப்படுகிறது.
  • (எ.கா) ஆந்தை காடுகளுக்கும் புல்வெளிகளுக்கும் இடையேயான இடைச்சூழலமைப்பு பகுதியில் காணப்படுகிறது.

10. இடைச்சூழலமைப்பு என்றால் என்ன ? 

  • இரண்டு சூழல்மண்டலங்களுக்கு இடையே காணப்படும் இடைநிலை மண்டலம் இதுவாகும்.
  • (எ.கா) ஆந்தை காடுகளுக்கும் புல்வெளி களுக்கும் இடையேயான இடைச்சூழலமைப்பு பகுதியில் காணப்படுகிறது.

11. சமவெளி மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தாவரக் கூட்டங்கள் அதிகமாகவும் மலையின் பகுதியில் குறைந்த தாவரக் கூட்ட வளர்ச்சி காணப்படுவது ஏன்?

  • மலையின் செங்குத்து பகுதி மழை நீரை விரைந்து ஓட அனுமதிக்கிறது. இதனால் நீரிழப்பு மற்றும் மேல் மண் விரைவாக அகற்றப்பட்டு மண் அரிப்பு நிகழ்கிறது.
  • இதனால் இங்கு குறைந்த தாவரக்கூட்ட வளர்ச்சி உள்ளது.
  • இதன் மறுபுறம் உள்ள சமவெளி, பள்ளத்தாக்கில் மண்ணின் மேற்பரப்பில் நீர் மெதுவாக வடிவ தாலும் நீர் நன்கு பராமரிக்கப்படுவதாலும் தாவரக் கூட்டங்கள் இங்கு நிறைந்துள்ளன.

13. பின்வரும் தொற்று தாவர வகைக்கு எ.கா. தருக.
a) முழு தண்டு ஒட்டுண்ணி:
b) முழு வேர் ஒட்டுண்ணி:

விடை : a) விஸ்கம், லொரான்தஸ்,
b) பெலனோஃபோரா, ஓரபாங்கி, ரெஃப்லீசியா
14. பின்வரும் பாதிஒட்டுண்ணி (அ) பகுதி ஒட்டுண்ணி வகைக்கு எ.கா. தருக.
a)தண்டு வாழ்பகுதி ஒட்டுண்ணி
b) வேர் வாழ் பகுதி ஒட்டுண்ணி :
விடை : n) விஸ்கம், லோரான்தஸ்,
b) சேண்டலம் (சந்தனக் கட்டை) 
15. யூட்ரிகுலேரியா (பை தாவரம்) டையோனியா வீனஸ் பூச்சி உண்ணும் தாவரம், சாரசீனியா போன்ற பூச்சிகள் மற்றும் விலங்குகளைச் சாப்பிடு வதன் மூலம் நைட்ரஜனை பெறுகின்றன. இவற்றில் எந்த வகையான இடைச்செயல்கள் காணப்படுகின்றன? 
  • இங்கு எதிர்மறை இடைச்செயலில் ஒன்றானகொன்று உண்ணும் வாழ்க்கை இரண்டு வகையான உயிரினங்களுக்கிடையே நடைபெறுகிறது.

16. ஒத்த சிற்றினங்களுக்கு இடையே நிகழும் போட்டி என்றால் என்ன?

  • ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த தனி உயிரிகளுக் கிடையேயான இடைச்செயல் ஆகும்.
  • இது மிகவும் கடுமையானது ஏனென்றால் தேவைஒரே விகிதத்தில் எல்லா உறுப்பினருக்கும்இருப்பதேயாகும்.
  • (எ.கா) உணவு, வாழிடம், மகரந்தசேர்க்கை இவற்றிற்கான போட்டி

17. போட்டியிடுதல் என்றால் என்ன? 

  • இதில் இருவகையான உயிரினங்கள் (அ) சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல் களில் இரண்டு உயிரினங்களும் பாதிப்படை கின்றன.

18. ஜீகுலோன் என்றால் என்ன? 

  • (அ) அமென்சாலிசம் எடுத்துக்காட்டுடன் விவரி ஜீகுலோன் நிக்ரா என்ற கருப்புவால்நெட் தாவரத் தின் கனிகள் மேல் ஓடு மற்றும் வேர்களில் ஜீகலோன் என்ற அல்கலாய்டைச் சுரந்து அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்ஃபா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியை தடுக்கிறது. இது அமன்சாலிசம் எனப்படும் எதிர் மறை இடைச்செயலாகும்.

19. ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என்றால் என்ன? 

  • தண்டு, இலை ஆகியவை பல தூவிகளால் சூழப் பட்டுள்ள வறண்ட நிலத்தாவரங்கள் ட்ரைக்கோ ஃபில்லஸ் தாவரங்கள் என அழைக்கப்படு கின்றன. (எ.கா) பூசணி வகைகள் (மிலோத்ரியா மற்றும் முகியா),

20, ஆர்கிட்கள், பெரணிகள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா, மணித்தாவரம். லைக்கன்கள் ஆகியவை தொற்றுத் தாவரம் ஏன்? (அ) தொற்றுத்தாவரம் என்றால் என்ன? 

  • ஒரு தாவரமானது மற்றொரு தாவரத்தின் மீது எந்தவொரு தீங்கும் விளைவிக்காமல் தொற்றி வாழ்வது தொற்றுத்தாவரம் எனப்படும்.
  • இது உடன் உண்ணும் நிலை இடைச்செயல் ஆகும்,
  • இதில் ஒன்று பயன் அடைகிறது மற்றொன்றுபயன் அடைவதில்லை.

21. ட்ரோப்போபைட்கள் என்றால் என்ன? 

  • கோடைக்காலங்களில் வறண்ட நிலத்தாவரங்கள் மழைக்காலங்களில் வனநிலத் தாவரங்களாகவோ (அ) நீர்வாழ் தாவரங்களாகவோ செயல்படும் தாவரங்கள் ட்ரோப்போபைட்கள் என அழைக்கப்படுகின்றன.

22. மேப்பிள், கைரோகார்ப்பஸ், டிப்டிரோகார்பஸ் மற்றும் டெர்மிடினேலியா இவற்றில் எந்த வகை யான தகவமைப்புகள் மூலம் விதைகள், கனிகள் பரவுகின்றன ? 

  • தட்டையான அமைப்பு கொண்ட இறக்கைகள் கொண்ட விதைகள் மற்றும் கனிகள் மூலம் காற்றில் பரவுகின்றன.

23. நான் யார் ? யூகிக்க. நான் விதை மேல்வளர்சதையினை கொண்டு எறும்புகள் மூலம் பரவுகின்றேன் ?

  • விதை மேல்வளர் சதை யூஃபோர்பியேசியே தாவர குடும்பத்தின் விதைகளின் நுண்துழை பகுதியில் காணப்படுகிறது.
  • இது எறும்புகளின் லார்வாக்களுக்கு உணவாக பயன்படுவதால் எறும்புகள் இந்த விதையை எடுத்து செல்கிறது.
  • இந்த விதை மேல்வளர் சதையை உண்ட பின் எறும்பு புற்றுகளின் பகுதியில் விதைகள் விடப் படுகின்றன.
  • அங்கேயே விதைகள் முளைக்கின்றன. இந்த முறைக்கு மிரமிக்கோஃபில்லி எனப்படும்.

24, வறண்ட நிலத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? 

  • உலர் (அ) வறள் நிலச்சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படு

அவை. 

அ) இயல்நிலை வறட்சிகின்றன.

ஆ) செயலநிலை வறட்சி என இருவகைப்படும்.

25.மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்றும் முறை யாது? எடுத்துக்காட்டுடன் வரையறுக்கவும்.

  • நெல், ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் காட்மியத்தை தங்களது புரதத்தோடு இணையச் செய்து சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக்கொள்கின்றன.
  • இந்தத் தாவரங்கள், மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்றவும் பயன்படுகின்றன. இதற்கு தாவரங்களால் சீரமைக்கப்படுதல் (Phyto remediation) என்று பெயர்.

26. பெடாலஜி (pedology) வரையறு. 

  • மண்ணைப் பற்றிப் படிக்கும் பிரிவு பெடாலஜி (pedology) எனப்படும்.

27. தொல்காலநிலையியல் என்றால் என்ன? எ.கா. தருக. 

  • தற்போது புவியில் வாழும் தாவரங்கள் மற்றும் சூழல் மண்டலம் ஆகியவை கற்காலச் சூழ்நிலையை வடிவமைக்க உதவுகிறது. எ.கா.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பனி குமிழ்களுக்குள் காணப்படும் மகரந்தம், பவளப் பாறை. மட்கிய விலங்கு மற்றும் தாவரங்கள்.

28. ஸ்கிளிரோபில்லஸ் காடுகள் என்றால் என்ன? 

  • குளிர் காலத்தில் அதிக மழையையும் கோடை காலத்தில் குறைவான மழையையும் பெறும் பகுதிகள் ஸ்கிளிரோபில்லஸ் காடுகள் என அழைக்கப்படுகின்றன.

29. அனிமோமீட்டர் வரையறு:

  • காற்றில் காணப்படும் புகைத்துகள்கள், வித்துக்கள், நுண்ணுயிரிகள், தூசி, நீராவி, வளி மாசுக்கள், மகரந்தத் துகள்கள் போன்றவை காற்றில் காணப்படும் கூறுகளாகும்.
  • காற்றின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி அனிமோ மீட்டர் எனப்படும்.

30. நைட்ரஜன் நிலைப்படுத்திகள் யாவை? 

  • லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ரைசோபியம் (பாக்டீரியம்) ஒருங்குயிரிநிலையில் வாழ்கிறது.
  • லெகூம் தாவர வேர்களிலிருந்து ரைசோபியம் உணவினை எடுத்துக் கொள்கிறது.
  • அதற்குப் பதிலாக வளிமண்டல நைட்ரஜன் நிலைநிறுத்தி நைட்ரேட்டாக மாற்றி ஓம்புயிரித் தாவரங்களுக்குக் கிடைக்குமாறு செய்கிறது.

 

VI. மூன்று மதிப்பெண் வினாக்கள்

1. குத்துயரத்திற்கும் மர எல்லைகோடுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? (அ) மர எல்லை கோடு என்றால் என்ன?

  • மர எல்லைக்கோடு என்பது கற்பனையாகமலையின் மேல் வரையப்பட்ட கோடு (அ) இது மலையின் மரங்கள் அமைந்துள்ள குத்து உயரத்தை குறிக்கிறது.
  • மரங்கள் பொதுவாக 3000 முதல் 4000 m குத்துயரம் வரை வளரும்.

2. ரைட்டிடோம் (Rhytidome) எவ்வாறு தாவரங்களை காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கிறது?

  • தாவரங்களில் காணப்படும் தீக்கு எதிராக உடற் கட்டமைவு இதுவாகும்.
  • இது குறுக்கு வளர்ச்சியின் முடிவாகத் தோன்றியசூபரினால் ஆன பெரிடெர்ம், புறணி, ஃபுளோயம்திசுக்களான பல அடுக்குகளை கொண்டது.
  • இப்பண்பு தீ, நீர் இழப்பு, பூச்சிகளின் தாக்குதல், நுண்ணுயிர் தொற்று ஆகியவற்றிலிருந்து தாவரங் களின் தண்டுகளைப் பாதுகாக்கின்றன.

3.சூழ்நிலையியலின் எந்த பிரிவு இயற்கை வளங் களை குறிப்பாக சூழல் அமைப்புகளை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது? (அ) பயன்பாட்டு சூழ்நிலையியல் என்றால் என்ன? (அ) சூழல் தொழில்நுட்பம் என்றால் என்ன? (அ) சூழல மேலாண்மை என்றால் என்ன?

  • பயன்பாட்டு சூழ்நிலையியல் (அ) சூழல் தொழில நுட்பம் இயற்கை வளங்களை நிர்வகிக கவும், குறிப்பாக சூழல்அமைப்புகள், காடு வன உயிரி ஆகியவற்றின் நிர்வகிக்க பாதுகாக்க உதவுகிறது.
  • சூழல் மேலாண்மை என்பது உயிரிபன்மப்பாது காப்பு சூழல் மறுசீரமைப்பு, புவி வாழிட வாழ் வாதார மேலாண்மை ஆக்கிரமிப்பு இனங்களின் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மை, இயற்கை நிலத்தோற்றத்தை திட்ட மிடல், சூழலின் தாக்கம், வடிவமைப்பு ஆகிய வற்றை எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உட்படுத்துவது சூழல் மேலாண்மை

4.சூழ்நிலைக் காரணிகள் என்றால் என்ன? (அ) சூழுல் காரணிகள் என்றால் என்ன? 

  • பல்வேறு உயிரினங்களும் சூழலோடு ஒருங்கி ணைந்துள்ளன.
  • சூழல் என்பது (சுற்றுப்புறம் ) இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியது.
  • உயிரினத்தைச் சுற்றியுள்ள ஒரு கூறானது உயிரினத்தின் வாழ்க்கையைப் பாதிக்கும் போது அது ஒரு காரணியாகிறது.
5.தாவரங்களை பாதிக்கும் சூழல்காரணிகள் யாவை?

  • காலநிலைக் காரணிகள் : சூரியஒளி, மழைப் பொழிவு கார்பன்டைஆக்ஸைடு மற்றும் நீராவி.
  • உயிரி காரணிகள் : பறவைகள், பூச்சிகள், மனிதன், மேயும் விலங்குகள், கொறித்துண்ணிகள், தாவர நோய்க்கிருமிகள், தொற்றுத்தாவரங்கள்.
  • நிலப்பரப்பியல் காரணிகள் மண்சரிவமைவு. மண்நீர், மண்ணின் இயற்பியல் அமைப்பு மண்கனிமங்கள், மண்வளி.

6.ஒளியினால் பசுத்தாவரங்களுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

  • ஒளியால் பசுந்தாவரங்களில் ஏற்படும் செயல்கள் ஒளிச்சேர்க்கை, இலைத்துளை திறத்தல் மற்றும் மூடுதல் அசைவுகள், விதை முளைத்தல், மலர்தல், கிழங்கு உருவாக்கம், ஒடுதண்டு உருவாக்கம், தண்டு மற்றும் இலை உருவாக்கம்

7.சமுதாய சூழ்நிலையிலிருந்து சிற்றின சூழ்நிலையியலை வேறுபடுத்துக.

சிற்றினச் சூழ்நிலையியல் 

சமுதாய சூழ்நிலையியல்

ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்த தாவரங்களின் தொகுப்பு (Population) பற்றிய இயலுக்கு சிற்றினச் சூழ்நிலையியல் என்று பெயர்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள் ஒரு குழுமமாக கூடி வாழ்வதனைப் (Several populations) பற்றிய இயலுக்கு சமுதாய சூழ்நிலையியல் என்று பெயர்.

8. சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (அ) பசலைமணி ஏன் சாகுபடிக்கு சிறந்தது? 

  • பசலைமண் சாகுபடிக்கு ஏற்ற மண் வகையாகும். இது 70% மணல் மற்றும் 30% களிமண் (அ) வண்டல் மண் (அ) இரண்டும் கலந்தது ஆகும்.
  • இந்த மண் 1) நன்கு நீர்தேக்குதல், 2) மெதுவாக வடிகால் பண்பை உறுதி செய்தல். 3) மண்ணில் துகள்களிடையே இடைவெளி உடன்
  • நல்ல காற்றோட்டம் முதலியவை இருப்பதால் தாவர வேர்கள் நன்கு மண்ணில் ஊடுருவி வளர முடிகிறது.

9. மண்ணின் நெடுக்கு வெட்டு விவரம் (Soil Profile) என்றால் என்ன?

  • மண் வெவ்வேறு அடுக்குற்ற மண்டலங்களாக, பல்வேறு ஆழத்தில் பரவியுள்ளது.
  • இவை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பண்புகளின் அடிப்படையில் வேறு படுகின்றன.
  • தொடர்ச்சியான ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப் பட்ட மண்ணின் பகுதியே மண்ணின் நெடுக்கு வெட்டு விவரம் எனப்படும்.

10. வெவ்வேறு குத்துயரங்களில் தாவரங்கள் மாறுபட்டு தனித்துவ மண்டலத்தை உருவாக்குகின்றன ஏன்?

  • கடல் மட்டத்திலிருந்து காணப்படும் உயரமே குத்துயரம் எனப்படுகிறது.
  • அதிகக் குத்துயரத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
  • வெப்பநிலை மற்றும் காற்றின் அழுத்தம் குறைந்தும் ஈரப்பதம் மற்றும் ஒளியின் தீவிரம் அதிகரித்தும் காணப்படுகின்றன.
  • இதனால் வெவ்வேறு குத்துயரங்களில் தாவரங்கள் மாறுபட்டு தனித்துவ மண்டலத்தை உருவாக்குகின்றன.

11.பூமத்திய ரேகை பகுதியிலிருந்து துருவங்களை நோக்கி வெவ்வேறு வகையான தாவரக்கூட்டங்கள். காணப்படுகின்றன ? ஏன்?

  • விரிவகலம் (Latitudes) எனப்படுவது
  • பூமத்தியரேகை பகுதியிலிருந்து காணப்படுகின்ற தூரம். பூமத்திய ரேகை பகுதியில் வெப்பநிலையானது அதிகமாகவும் துருவங்களை நோக்கிப் படிப்படி யாக குறைந்தும் காணப்படுகின்றன. எனவே வெவ்வேறு வகையான தாவரக்கூட்டம் காணப் படுகிறது.

12. இயற்கை நில அமைவு என்றால் என்ன? அதன் காரணிகள் யாவை?

  • புவியின் மேற்பரப்பு வடிவம் மற்றும் அம்சங்களை ஆய்வது இயற்கை நில அமைவு ஆகும்.

காரணிகள் :
1) விரிவகலம் மற்றும் குத்துயரம்
2) மலைகளின் நோக்கு திசைகள்
3) மலையின் செங்குத்தான பகுதி,

13. ஸ்பானிய மாஸ், டில்லான்ஷியா ஆகியன ஒக் மற்றும் பைன் மரப்பட்டைகளின் மேலே வளர் கின்றன. மேலே கூறிய எடுத்துக்காட்டில் எந்த வகையான இடைச்செயல் காணப்படுகின்றது? 
  • நேர்மறை இடைச்செயலான உடன் உண்ணும் நிலை காணப்படுகின்றது.
  • இங்கு இரு வேறு சிற்றினங்களுக்கு இடை யிலான இடைச்செயல்களால் ஒன்று பயன் அடைகிறது.
  • இதில் பயன் அடைகின்ற சிற்றினமானது சுமன் செல் எனவும் மற்ற சிற்றினமானது ஓம்புயிரி எனவும் அழைக்கப்படும்.

14. வெலாமன் என்றால் என்ன? 

  • உயர்நிலை தொற்றுத் தாவரங்கள் (ஆர்கிட்கள்) வளிமண்டலத்திலிருந்து ஊட்டச்சத்துக்கள், நீர் ஆகியவற்றை உறிஞ்சும் வேர்களில் காணப்படும் வெலாமன் எனும் சிறப்பு வகை திசுக்கள் மூலம் பெறுகின்றன.

15.முன்னோடி கூட்டுறவு என்றால் என்ன? 

  • இரண்டு வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே யான இடைச்செயல்களில் இரண்டும் பயன டைகிறது.
  • ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்திராத உறவு முறை கொண்ட நிகழ்வாகும்.
  • (எ.கா) மணவாழ் பாக்டீரியங்கள் / பூஞ்சைகள் மற்றும் தாவரங்களுக்கிடையேயான கூட்டுறவு.

18. முழு ஒட்டுண்ணிகள் என்றால் என்ன? 

  • ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஒம்புயிரி தாவரத்தினை முழுவதுமாக சார்ந்திருந்தால் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. (எ.கா) கஸ்குட்டா.

19. ட்ரைக்கோடெர்மா (பூஞ்சை) அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கிறது. ஏன்? அமன்சாலிஸம் என்றால் என்ன?

  • இங்கு இரண்டு உயிரிகளுக்கிடையே நிகழும் இடைச்செயல்களில் ஒரு உயிரி ஒடுக்கப் பட்டாலும் மற்றொரு உயிரி எந்த பயனையும் அடைவதில்லை (அ) பாதிக்கப்படுவதில்லை.
  • இடைத்தடை வேதிப்பொருட்கள் என்ற சில வேதிப்பொருட்களைச் சுரப்பது மூலம் இந்த ஒடுக்கப்படுதல் நிகழ்கிறது.
  • இந்த நிகழ்ச்சி அமன்சாலிஸம் (அ) நுண்ணுயிரி எதிர்ப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.

20. ஃபில்லியம் ஃப்ராண்டோஸம், காராசியஸ் மோரோஸஸ் எந்த வகையான இடைச்செயல்களை கொண்டுள்ளது? (அ) பாவனை செயல் என்றால் என்ன?

  • சிற்றினங்களுக்கிடையேயான இடைச்செயல்கள் (அ) இணைப்பரிணாமக்குழு இயக்கவியலின் பாவனை செயல்களை கொண்டுள்ளது.
  • ஒரு உயிரி தனது அமைப்பு, வடிவம், தோற்றம் நடத்தை ஆகியவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வாய்ப்பை பெருக்கவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.

21. கைரமோன் என்றால் என்ன ? 

  • ஃபிரிஸ் ரேஃபே சிற்றினக் கம்பளிப்புழு வெளி யிடும் கைரமோன் என்ற சேர்மம் காட்டுவகை முள்ளங்கியின் வாயிலாக காப்புத்தன்மை அதன் சந்ததிகளுக்குக் கடத்துகிறது.

22. அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு இவற்றில் காணப்படும் இடைச்செயல் யாது? இது எதை உணர்த்துகிறது?

  • எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன் அக்கேஷியா போன்ற சில தங்கு மிடமாக கொள்கின்றன.
  • இந்த எறும்புகள் தாவரங்களை காக்கும் காப்பாள ராகவும் இதற்கு பதிலாக தாவரங்கள் எறும்பு களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
  • இது மிர்மிகோஃபில்லி எனப்படும்.

23. ஹைக்ரோபைட்கள் என்றால் என்ன? 

  • ஈர்த்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள். (எ.கா) ஹேபினேரியா (ஆர்கிட்கள்), மாஸ்கள் (பிரையோஃபைட்கள்) முதலியன.

24. உவர் சதுப்புநிலக்காடுகள் எவ்வாறு இயற்கை அழிவிலிருந்து பாதுகாக்கிறது?

  • உவர் சதுப்பு நிலக்காடுகள் கடற்கரை பகுதிகளில் தங்களின் வேர்களால் கடலகரைகள், மண் அரித்தலை தடுக்கிறது.
  • தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் (நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்) இவ்வகை காடுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் மட்டும் காணப்படுகிறது.
  • இங்கு மட்டுமே கஜா புயலால் குறைந்த அளவு சேதமே ஏற்பட்டது. இதற்கு அலையாத்தி காடு களே (உவர் சதுப்புநிலக்காடுகளே) காரணம்.

25. வறட்சி நிலையை தவிர்க்கும் (அ) சமாளிக்கும் (அ) குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரங்கள் என்றால் என்ன?

  • இத்தாவரங்கள் மிகக்குறைந்த குறுகிய காலத்தில் தன் வாழ்க்கை சுழற்சியினை முடித்துக் கொள்கின்றன.
  • இவை உண்மையான வறண்ட நிலத்தாவரங்கள் இல்லை.
  • (எ.கா) ஆர்ஜிமோன், மொல்லுகோ, ட்ரிபுலஸ் மற்றும் டெஃப்ரோசியா.

26. கடலின் மிக ஆழமான பகுதியின் சக்தி எங்கிருந்து பெறப்படுகின்றது?

  • கடலின் ஆழமான பகுதி (>500 m) மிகவும் இருட்டாகவும் அங்கு காணப்படும் உயிரினங்கள் சூரிய ஒளியை பயன்படுத்தாததாகவும் காணப் படுகின்றனது.
  • எனவே ஆழமான பகுதியில் வேதிவினையின் மூலம் உயிர்கள் உணவை தயாரிக்கின்றன.

27. சூழ்நிலையியலில் நான்கு முக்கிய தினங்களை குறிப்பிடு.

  1. மார்ச் 21 -உலக வன தினம்
  2. ஏப்ரல் 22 – புவி தினம்’
  3. மே 22 – உலக உயிரி பன்ம தினம்
  4. ஜூன் 07 – உலக சுற்றுச்சூழல் தினம்

28. பில்லோடு என்றால் என்ன? 

  • சிலவற்றில் இலைக்காம்பானது சதைப்பற்றுள்ள இலை போன்று உருமாற்றம் அடைந்துள்ளது. இது காம்பிலை (அ) பில்லோடு (அ) அல்கேஷியா மெலனோசைலான் என அழைக்கப்படுகிறது.

29. கிளாடோடு வரையறு

  • வேறு சில தாவரங்களில் ஒன்று அல்லது இரண்டு கணுவிடைப்பகுதிகள் சதைப்பற்றுடன் பசுமையாக மாறுபாடு அடைந்துள்ளது இதற்கு கிளாடோடு (அஸ்பராகஸ்) என்று அழைக்கப் படுகிறது.

30. ஃபில்லோகிளாட் என்றால் என்ன?(அ) இலைத் தொழில் தண்டு

  • சில வறண்ட நிலத் தாவரங்களின் தண்டின் அனைத்து கணுவிடைப் பகுதிகளும் சதைப் பற்றுள்ள இலை வடிவ அமைப்பாக மாற்ற மடைந்துள்ளன. இவை இலைத் தொழில் தண்டு (ஃபில்லோகிளாட்) (ஒப்பன்ஷியா) என அழைக்கப்படுகின்றன.

31. சுவாசிக்கும் வேர்கள் என்றால் என்ன? எ.கா. தருக 

  • புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இவற்றில் தோன்றும் சில சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் எனப்படுகின்றன. அதில் அமைந்துள்ளன நிமத்தோடுகள் கொண்ட தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைக் கொண்டுள்ளது இதற்கு சுவாசிக்கும் வேர்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. அவிசென்னியா

VII. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1. வெப்பநிலை அடிப்படையிலான மண்டலங்கள் யாவை? (அ ) வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
  • விரிவகலம் மற்றும் குத்துயரம் ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகள் பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் தாவரக்கூட்டங்களை பாதிக்கிறது.
  • விரிவகலம் (Latitude) : விரிவகலம் என்பது பூமத்திய ரேகையின் (0 ° முதல் துருவங்களின் 90° வரையில் காணப்படும் கோணமாகும்.
  • குத்துயரம் (Altitude): கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மேலே அந்தப் பகுதியானது அமைந்து உள்ளது என்பதைக் குறிப்பதாகும்.

வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் : 

  • வெப்பநிலை ஒரு தாவர உடலில் நடைபெறும் அனைத்து உயிர்வேதியியல் வினைகளுக்கு உதவும் நொதிகளின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.
  • இது உயிரியல் அமைப்புகளில் CO2 மற்றும் O2 கரைதிறனை பாதிக்கிறது. சுவாசத்தை அதிகரிக் கிறது மற்றும் நாற்றுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
  • உயர் ஈரப்பதத்துடன் கூடிய குறைந்த வெப்ப நிலை தாவரங்களுக்கிடையே நோய்களைப் பரப்புகிறது.
  • ஈரப்பதத்துடன் மாறுபடும் வெப்பநிலை தாவரக் கூட்ட வகைகளின் பரவலைத் தீர்மானிக்கிறது.

2. காலநிலை காரணியான காற்றினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

காற்றினால் ஏற்படும் விளைவுகள் : 
  • காற்று மழையினை உருவாக்கும் காரணியாகும். ஒரு முக்கியக்
  • இது ஏரிகள் மற்றும் கடல்களில் நீர் அலைகளை ஏற்படுத்துவதால் காற்றோட்டத்தினை மேம் படுத்துகிறது.
  • வலுவான காற்று மண் அரிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் மண்ணின் வளத்தினைக் குறைக்கிறது.
  • இது நீராவிப்போக்கின் வேகத்தினை அதிகரிக்கச் செய்கிறது.
  • காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவரங்களுக்கு இது உதவி புரிகிறது.
  • இது கனிகள், விதைகள், வித்துக்கள் இன்னும் பலவற்றினைப் பரவச் செய்வதற்கு உதவி புரிகிறது.
  • வலுவான காற்று பெரிய மரங்களை வேரோடு சாய்த்து விடுகிறது.
  • ஒற்றைத் திசைவீசும் காற்றானது மரங்களில் கொடி வடிவ (flag forms) வளர்ச்சியினைத் தூண்டுகிறது.

3.மண்ணின் காரணிகள் தாவரக்கூட்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என எழுதுக. (அ) தாவர வளர்ச்சிக்கு மண்ணின் காரணிகள் எவ்வளவு  முக்கியமானவை என்பதை எழுதுக. 

மண்ணின் காரணிகள் தாவரக்கூட்டங்களை பின்வருமாறு பாதிக்கின்றன. 

மண் ஈரப்பதன் : 1.

  • தாவரங்கள் மழைநீர் மற்றும் வளிமண்டல ஈரப்பதத்திலிருந்து நீரை உறிஞ்சுகின்றன.
மண்ணின் நீர் : 2.
  • தாவரங்களின் பரவலைப் பாதிக்கும் மற்ற சூழ்நிலை காரணிகளை விட மண் நீர் மிகவும் முக்கியமான காரணியாகும். மழைநீர் மண்ணின் முக்கிய ஆதாரமாக உள்ளது. நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் முக்கியமான நீரின் வடிவமாகும்.

மண் வினைகள்:3

  • மண் கரைசலில் காணப்படுகின்றன நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அயனி செறிவை (pH) பொறுத்தே தாவரங்களுக்கு ஊட்டசத்துக்கள் கிடைப்பது நிர்ணயிக்கப்படுகிறது. பயிர் தாவரங் கிளன் சாகுபடிக்கு மிகச்சிறந்த ஹைட்ரஜன் அயனி செறிவு மதிப்பு 5.5 முதல் 6.8 வரை ஆகும்.

மண் ஊட்டச்சத்து :4

  • தாவர ஊட்டங்களுக்கு தேவையான தனிமங்கள், கரிம ஊட்டப்பொருட்கள் ஆகியவற்றினை அயனி வடிவில் கிடைக்கச்செய்ய உதவும் திறனே மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித் திறன் எனப்படுகிறது.

மண் வெப்பநிலை:5

  • மண் வெப்பநிலையானது தாவரங்களின் புவியியல் பரவலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. வேர்கள் மூலம் தண்ணீர் மற்றும் திரவக்கரைசல் உறிஞ்சுதலைக் குறைவான வெப்பநிலை குறைக்கிறது.

மண்வளி மண்டலம் :6

  • மண் துகள்கிடையே காணப்படுகின்ற இடை வெளிகள் மண்வளி மண்டலத்தை அமைக்கிறது. இது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டைஆக்ஸைடு ஆகிய வளிகளைக் கொண்டுள்ளது.

மண் வாழ் உயிரினங்கள் : 7.

  • மண்ணில் காணப்படுகின்ற பாக்டீரியங்கள், பூஞ்சைகள், பாசிகள், புரோட்டோசோவான்கள். நெமட்டோகள், பூச்சிகள் மண் புழு ஆகியவை மண் உயிரினங்கள் என அழைக்கப்படுகின்றன.

4. இயற்கை நில அமைவு (அ) நிலபரப்பு என்றால் என்ன? (அ) நிலப்பரப்பு காரணிகள் எவ்வாறு ஒரு பகுதியின் தட்ப வெப்பநிலையை பாதிக்கிறது? 

  • இது புவியின் மேற்பரப்பு வடிவம் மற்றும் PTA – 2 அம்சங்களை ஆய்வது ஆகும். இது இயற்கை நில அமைவு என அழைக்கப்படுகிறது. நிலப்பரப்பு காரணிகள் விரிவகலம், குத்துயரம், மலையின் திசைகள், மலையின் செங்குத்து ஆகிய பண்புகளை உள்ளடக்கியது.

அ. விரிவகலம் மற்றும் குத்துயரம் (Latitudes and Altitudes): 

  • விரிவகலம் எனப்படுவது பூமத்திய ரேகை பகுதி யிலிருந்து காணப்படுகின்ற தூரம், பூமத்திய ரேகை பகுதியில் வெப்பநிலையானது அதிக மாகவும், துருவங்களை நோக்கிப் படிப்படியாகக் குறைந்தும் காணப்படுகின்றன.
  • பூமத்திய ரேகை பகுதியிலிருந்து துருவங்களை நோக்கிக் காணப்படுகின்றன வெவ்வேறு வகையான தாவரக்கூட்டங்கள் படத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • கடல் மட்டத்திலிருந்து காணப்படும் உயரமே குத்துயரம் எனப்படுகிறது. அதிகக் குத்துயரத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. வெப்பநிலை மற்றும் காற்றின் அழுத்தம் குறைந்தும், ஈரப்பதன் மற்றும் ஒளியின் தீவிரம் அதிகரித்தும் காணப்படு கின்றன. இந்தக் காரணிகளால் வெவ்வேறு குத்துயரங்களில் தாவரங்கள் மாறுபட்டுத் தனித் துவமான மண்டலத்தை உருவாக்குகின்றன.

ஆ. மலைகளின் நோக்கு திசைகள் (Direction of Mountain):

  • ஒரு மலையின் இரண்டு பக்கங்களும் வெவ் வேறான சூரியஒளி, கதிர்வீச்சு, காற்று செயல்கள் மழை ஆகியவற்றினைப் பெறுகின்றன. இந்த இரண்டு பக்கங்களின் மழை பெறும் பகுதியில் (wind word region) அதிகத் தாவரங் களில் மழை மறைவு பகுதியில் மழை பற்றாக்குறை காரண மாகக் குறைவான தாவரங்களையே காணலாம். இதே போல நீர்நிலைகளான குளங்களில் மண்ணின் சரிவமைப்பு காரணமாக விளிம்பு மற்றும் மையப்பகுதியில் நீர் பல்வேறு ஆழங் களைக் கொண்டும். வேறுபட்டுள்ள அலை இயக்கத்தின் காரணமாகவும் ஒரே பரப்பளவில் வேறுபட்ட பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்களைக் கொண்டுள்ளன.

இ.மலைகளின் செங்குத்தான பகுதி (Steepness of the mountain):

  • குன்று அல்லது மலையின் செங்குத்தான பகுதி மழை நீரை விரைந்து ஓட அனுமதிக்கிறது. இதன் விளைவாக நீரிழப்பு மற்றும் மேல் மண் விரைவாக அகற்றப்பட்டு மண் அரிப்பு நிகழ் கிறது. இதன் காரணமாகக் குறைந்த தாவரக் கூட்ட வளர்ச்சி இங்கு ஏற்படுகிறது. இதன் மறு புறம் உள்ள சமவெளி மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மண்ணில் மேற்பரப்பு நீர் மெதுவாக வடிவதாலும் மற்றும் நீர் நன்கு பராமரிக்கப்படு வதாலும் தாவரக்கூட்டங்கள் இங்கு நிறைந்து உள்ளன.

5.தாவரங்களின் மீது குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் உயிரி காரணிகள் யாவை? விளக்குக.

தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய உயிரினங்களுக்கிடையே ஏற்படும் இடைச்செயல் விளைவுகள் உயிரிக்காரணிகள் என அழைக்கப்படுகின்றன.
நேர்மறை இடைச்செயல்கள் (Positive interactions):
இவ்வகை இடைச்செயல்களில், பங்கேற்கும் சிற்றினங்களில் ஒன்று மட்டுமே அல்லது இரண்டுமே பயன் அடைகின்றன. (எ.கா) ஒருங்குயிரிநிலை (Mutualism) உடன் உண்ணும் Benev (Commensalism).
அ) ஒருங்குயிரி நிலை (Mutualism):
  • இங்கு இரண்டு வகையான சிற்றினங்களுக்கு இடையில் ஏற்படும் கட்டாய இடைச்செயல் களால் இரண்டு சிற்றினங்களும் பயனடை கின்றன.

நைட்ரஜன் நிலைப்படுத்திகள்(Nitrogen fixation): 

  • லெகூம் வகை தாவரங்களின் வேர்களில் காணப் படும் முடிச்சுகளில் ரைசோபியம் (பாக்டீரியம்) ஒருங்குயிரி நிலையில் வாழ்கிறது. லெகூம் தாவர வேர்களிலிருந்து ரைசோபியம் உணவினை எடுத்துக் கொள்கிறது. அதற்குப் பதிலாக வளி மண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி நைட்ரேட் டாக மாற்றி ஒம்புயிரித் தாவரங்களுக்குக் கிடைக்குமாறு செய்கிறது.

நீர் பெரணியாகிய அசோலா மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் சயனோபாக்டீரியம் (அன்பீனா) லைக்கன்கள் – ஆல்கா மற்றும் பூஞ்சையிடையே யான ஒருங்குயிரி நிலை.

ஆ) உடன் உண்ணும் நிலை (Commensalism) :

  • இரு வேறு சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களால் ஒன்று பயன் அடைகிறது. மற்றொன்று பயன் அடைவதில்லை அல்லது பாதிப்பு அடைவதில்லை.

குடுவைத் தாவரம் பூச்சியுடன்

தொற்றுத்தாவரங்கள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா. மணித்தாவரம், அஸ்னியா (லைக்கன்) ஆகியவை தாவரங் களுக்கான பிற எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்மறை இடைச்செயல்கள் (Negative interactions); 
  • பங்கேற்கும் சிற்றினங்களில் ஒன்று பயன் அடைகிறது. ஆனால் மற்றொன்று பாதிக்கப் படுகிறது. இது எதிர்மறை இடைச்செயல் என்று அழைக்கப்படுகின்றது. (எ.கா) கொன்று உண்ணும் வாழ்க்கை முறை, ஒட்டுண்ணி வாழ்க்கை, போட்டியிடுதல் மற்றும் அமன் சாலிஸம்.

6.வறண்ட நீர்த்தாவரங்களின் புறத்தோற்ற தகவமைப்புகளை எழுதுக. 

புற அமைப்பில் தக அமைவுகள்

வேர் 

  • வேர்த்தொகுப்பு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தண்டு தொகுப்பினைக் காட்டிலும் வேர்த்தொகுப்பு அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
  • வேர் தூவிகள் மற்றும் வேர் மூடிகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.

தண்டு 

  • தண்டு பெரும்பாலும் கடினமானது. கட்டை தன்மையுடையது. இது தரைமேலி அல்லது தரைகீழ்க் காணப்படலாம்.
  • தண்டு மற்றும் இலைகளின் மேற்பரப்புகளில் மெழுகு பூச்சு காணப்படுவதுடன் அடர்த்தியான தூவிகளும் காணப்படுகின்றன.
  • சில வறண்ட நிலத் தாவரங்களின் தண்டின் அனைத்துக் கணுவிடைப் பகுதிகளும் சதைப் பற்றுள்ள இலை வடிவ அமைப்பாக மாற்ற மடைந்துள்ளன. இவை இலைத்தொழில் தண்டு (ஃபில்லோகிளாட்) (ஒப்பன்ஷியா) எனப்படு கின்றன.
  • வேறு சில தாவரங்களில் ஒன்று அல்லது அரிதாக இரண்டு கணுவிடைப் பகுதிகள் சதைப்பற்றுள்ள பசுமையான அமைப்பாக மாறுபாடு அடைந்துள்ளது. இவை கிளாடோடு (ஆஸ்பராகஸ்) எனப்படும்.
  • சிலவற்றில் இலைக் காம்பானது சதைப்பற்றுள்ள இலை போன்று உருமாற்றம் அடைந்துள்ளது. இது காம்பிலை (ஃபில்லோடு) (அக்கேஷியா வறண்ட நிலத்தாவரங்கள் மெலனோசைலான்) என அழைக்கப்படுகிறது.

அ) சதைப்பற்றுடைய வறண்ட நிலத் தாவரம்

ஆ) சதைப்பற்றற்றது -பல்லாண்டு
வாழ்பவை-கெப்பாரிஸ்
இ) கிளடோடு – அஸ்பராகஸ்

ஈ)காம்பிலை – அக்கேஷியா

  • தண்டு, இலை ஆகியவை பல தூவிகளால் சூழப் பட்டுள்ள வறண்ட நிலத் தாவரங்கள் ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.  எடுத்துக்காட்டு: பூசணி வகைகள். (மிலோத்ரியா மற்றும் முகியா)

இலைகள்

  • சூரிய ஒளி மற்றும் வெப்பத்தினை பிரதிபலிக்க உதவும் தோல் போன்றும், பளபளப்பாகவும் உள்ள இலைகள் பொதுவாகக் காணப் படுகின்றன.
  • யூஃப்போர்பியா, அக்கேஷியா, ஜிஜிபஸ், கெப்பாரிஸ் போன்ற தாவரங்களில் இலையடிச் செதில்கள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.
  • முழு இலைகளும் முட்களாகவோ (ஒபன்ஷியா) மற்றும் செதில்களாகவோ (ஆஸ்பராகஸ்) மாற்றுரு அடைந்து காணப்படுகின்றன.

7. நீர்வாழ் தாவரங்களின் உள்ளமைப்பு தக அமைவுகள் மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் யாவை?

  • கியூட்டிக்கள் முழுமையாகக் காணப்படாமலோ அல்லது காணப்பட்டால் மெல்லியதாகவோ அல்லது குறைவாகவோ வளர்ச்சி அடைந்து இருத்தல்,
  • ஓர் அடுக்கு புறத்தோல் காணப்படுவது
  • நன்கு வளர்ச்சியடைந்த ஏரங்கைமாவினால் ஆன புறணி காணப்படுவது
  • வாஸ்குலத் திசுக்கள் குறைவான வளர்ச்சி அடைந்துள்ளது.
  • வேரூன்றி வெளிப்பட்ட நீர் வாழ்த்தாவரங்களில் வாஸ்குலத்திசுக்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களைத் தவிர மற்ற தாவரங்களில் வலுவைக் கொடுக்கும் திசுக்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை. பித் செல்கள் ஸ்கிளிரங்கைமாவினால் ஆனது.

வாழ்வியல் தக அமைவுகள் (Physiological adaptations of hydrophytes):

  • நீர்வாழ் தாவரங்கள் காற்றிலாச் சூழலைத்தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது.
  • இவை வாயு பரிமாற்றத்திற்கு உதவும் சிறப்பு உறுப்புகளைக் கொண்டுள்ளது.

8`தொற்றுத் தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகவமைவுகள் யாவை? 

தொற்றுத்தாவரங்கள் (Epiphytes): 
  • மற்ற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரங்கள் எனப் படுகின்றன. இதில் ஆதாரத் தாவரத்தை உறை விடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள் கின்றன. ஆனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை. தொற்றுத் தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
  • (எ.கா) ஆர்கிட்கள், (வாண்டா) வன்கொடிகள், தொங்கும் மாண்கள், மணி தாவரங்கள்.

புறஅமைப்பில் தக அமைவுகள் :

  • வேர்த்தொகுப்புகள் விரிவாக வளர்ச்சி அடைந்து உள்ளது. இதில் இருவகை வேர்கள் காணப்படு கின்றன.

இவை 

அ) பற்றுவேர்கள் மற்றும்
ஆ)உறிஞ்சு வேர்கள்
  • தொற்றுத் தாவரங்களின் பற்றுவேர்கள் (Clinging roots) ஆதாரத் தாவரங்களின் மீது உறுதியாக நிலை நிறுத்த உதவுகின்றன.
  • நிலப்புற வேர்கள் (Aerial roots) பசுமையானது. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டி ருப்பவை. மேலும் இது வளி மண்டலத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமனி (Velamen) என்ற பஞ்சு போன்ற திசுவுடையது.
  • சில தொற்றுத் தாவரங்களின் தண்டு சதைப் பற்றுள்ளதாகவும் மற்றும் போலி குமிழ்களையோ அல்லது கிழங்குகளையோ உருவாக்குகின்றன. இலைகள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கை யிலும் தடிப்பான தோல் போன்றும் காணப்படு கின்றன.
  • கொன்று உண்ணிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் தொற்று தாவரக்கூட்டங்களில் மிர்மிகோஃபில்லி பொதுவாகக் காணப்படுகிறது.

9.உள்ளமைப்பு மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் தொற்றுத் தாவரங்களில் எவ்வாறு உள்ளன என்று எழுதுக.

  • பல்லடுக்கு புறத்தோல் காணப்படுகிறது. வெலாமன் திசுவினை அடுத்துச் சிறப்பாக அமைந்த எக்சோடெர்மிஸ் (Exodermis) அடுக்கு ஒன்று காணப்படுகிறது.
  • நீராவிப் போக்கினை வெகுவாகக் குறைப்பதற் காகத் தடித்த கியூட்டிகிள் மற்றும் உட்குழிந்த இலைத்துளைகள் ஆகியன காணப்படுகின்றன.
  • சதைப்பற்றுள்ள தொற்றுத் தாவரங்களில் நீரினைச் சேமிக்க நன்கு வளர்ச்சி அடைந்த பாரங்கைமா திசுக்கள் காணப்படுகின்றன.வெலாமன் திசுக் கொண்டு ஆர்கிட் நில மேல் வேரின் குறுக்குவெட்டுத் தோற்றம் வாழ்வில் தக அமைவுகள் : நீரைச் சிறப்பாக உறிஞ்ச வெலாமன் திசு உதவுகிறது.

10.உவர் சதுப்பு நில வாழ்த்தாவரங்கள் (அ) கனிக்குள் உள்ளமைப்பு மற்றும் வாழ்வின் தகஅமைவுகள் விதைமுளைத்தல் செயலின் காணப்படும் பற்றி எழுதுக. 

உள்ளமைப்பில் தக அமைவுகள் :

  • தண்டில் காணப்படும் சதுர வடிவப் புறத்தோல் செல்கள் மிகையான க்யூட்டின் பூச்சைப் பெற்றிருப்பதுடன் அவற்றில், எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் டான்னின் நிரம்பிக் காணப்படுகின்றன.
  • தண்டின் புறணிப் பகுதியில் வலுவூட்டுவதற்காக நட்சத்திர வடிவ ஸ்கிலிரைட்களும் ‘H’ வடிவ தடித்த அடர்த்தியற்ற ஸ்பிகியூல்களும் காணப் படுகின்றன.
  • இலைகள் இருபக்க இலைகளாகவோ அல்லது சமபக்க இலைகளாகவோ இருப்பதுடன் உப்பு சுரக்கும் சுரப்பிகளையும் பெற்றுள்ளன.

வாழ்வியல் தக அமைவுகள்: 

  • சில தாவரங்களின் செல்கள் அதிக அழுத்தச் சவ்வூடு பரவல் அழுத்தத்தைக் கொண்டுள்ளன. விதை முளைத்தலானது கனி தாய் தாவரத்தில் இருக்கும் போதே நடைபெறுகின்றது (கனிக்குள்) விதை முளைத்தல்).

11. நீர் மூலம் விதை பரவும் தாவரங்களில் காணப்படும் தகஅமைவுகள் யாவை? 

  • நீர்நிலைகள் அல்லது நீர் நிலைகளுக்கு அருகில் வளரும் தாவரங்களின் விதைகள் மற்றும் கனிகள் பொதுவாக நீர் மூலமாகப் பரவுகின்றன.
  • தலைகீழ்க் கூம்பு வடிவப் பூத்தளம் (Receptacle) கொண்டு அவற்றில் காற்று அறைகள் காணப் படுதல். (எ.கா.) தாமரை
  • கனியில் மெல்லிய வெளியுறையும், நார்களாலான நடு உறையினையும் கொண்டிருப்பது. (எ.கா) தேங்காய்
  • இலேசான சிறிய மற்றும் காற்றினை உள்ளடக்கிய விதை ஓட்டு வளரிகளை விதைகள் பெற்று இருப்பது. (எ.கா) அல்லி
  • உப்பியத்தன்மையுடன் கூடிய கனிகளைக் கொண்டிருத்தல். (எ.கா) ஹெரிட்டீரா லிட்டோராலிஸ்
  • தானாகவே காற்றில் மிதக்க இயலாத தன்மை கொண்ட விதைகள் ஓடு நீரின் வேகத்தினால் அடித்துச் செல்லப்படுகின்றன. (எ.கா) தேங்காய்

12. காற்று ஒரு முக்கிய காலநிலை காரணி சூழியலின் இதன் பங்கினை விளக்குக.

  • விசையுடன் கூடிய இயங்கும் வளி, காற்று என அழைக்கப்படுகிறது. இது முக்கியச் சூழல் காரணி ஆகும்.

வளிமண்டலத்திலுள்ள வளிகளின் கலவை

  • நைட்ரஜன் 78%, ஆக்ஸிஜன் 21%. கார்பன்டை ஆக்ஸைடு 0.03%, ஆர்கானி மற்றும் இதர வாயுக்கள் 0.93%, நீராவி வளி மாசுக்கள் தூசி, புகைத் துகள்கள். நுண்ணுயிரிகள், மகரந்தத் துகள்கள், வித்துக்கள் போன்றவை காற்றில் காணப்படுகின்றன. ஏனைய கூறுகளாகும்.
  • காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படுத்தப் படும் கருவி அனிமோமீட்டர் ஆகும்.
  • எனவே காற்று ஒரு முக்கிய காலநிலை காரணி ஆகும்.
13. வெடித்தல் வழிமுறை என்றால் என்ன? இவ்வகை கனிகளில் காணப்படும் தகஅமைவுகள் யாவை?
  • சில கனிகள் திடீரென்று ஒரு விசையுடன் வெடித்து அதனுடைய விதைகள் அந்தத் தாவரத்தின் அருகிலேயே பரவுதல்.
  • சில கனிகளைத் தொடுவதன் மூலம் அவை திடீரென வெடித்து விதைகள் மிகுந்த விசை யுடன் தூக்கி எறியப்படுகின்றன. (எ.கா) காசித்தும்பை
  • சில கனிகளில் மழை தூரலுக்குப் பின், திடீரௌச் சத்தத்துடன் வெடித்து விதைகளானது பரவப்படுகின்றன. (எ.கா) ருயில்லியா மற்றும் கிரசான்ட்ரா
  • சில கனிகள், பட்டாசு போன்ற அதிகச் சத்தத்துடன் வெடித்து அனைத்து திசைகளிலும் விதைகளைச் சிதறடிக்கச் செய்கின்றன. (எ.கா) பாஹினியா வாஹலி ஒட்டகப்பாதக்கொடி (Camel’s foot climber)
  • கனிகள் முதிர்ச்சியடைந்தவுடன் விதைகளைச் சுற்றியுள்ள திசுக்கள் பிசின் போன்ற அடர்த்தியான திரவமாக மாற்றமடைவதால் கனிகளின் உள்ளே அதிக விறைப்பழுத்தம் (High turgor presure) ஒன்று உண்டாக்கப்பட்டுக் கனியானது வெடித்து விதைகள் பரவ உதவுகிறது.(எ.கா) எக்பெல்லியம் – எலேட்டிரியா என்ற பீய்ச்சும் வெள்ளரி (Squirting cucumber) கைரோ கார்பண் மற்றும் டிப்டீரோ கார்ப்பஸ்.

Leave a Reply