You are currently viewing 12th Botany PURE SCIENCE Guide 9th Lesson 2 Marks

12th Botany PURE SCIENCE Guide 9th Lesson 2 Marks

12th Botany PURE SCIENCE Guide 9th Lesson 2 Marks

12th Botany Pure Science Guide 10th Lesson Answers. 12th Botany PURE SCIENCE 10th Lesson Answers. 12th Standard Pure Science Grout Unit 10, 10th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவுத் தாவரவியலும் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide. https://www.lyrics2tamilsongs.com/

12th Botany PURE SCIENCE Guide 9th Lesson 2,3,&5Marks

1.உயிரி உரங்களின் வேறு பெயர்கள் யாவை?
  • நுண்ணுயிர் வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
2. தழையிலை உரத்திற்குப்பயன்படும் முக்கிய தாவரச்சிற்றினங்கள் எது? 
  • தழையிலை உரத்திற்குப் பயன்படும் முக்கியத்தாவரச் சிற்றினங்கள் கேசியா ஃபிஸ்டுலா (கொன்றை), செஸ்பேனியா கிரான்டிஃளோரா (அகத்தி), அசாடிராக்டா இண்டிகா (வேம்பு) டெலோனிக்ஸ் ரீஜியா (நெருப்புக் கொன்றை), பொங்கேமியா பின்னேட்டா (புங்கம்).
3. விதைப்புத் தழை உரம் என்றால் என்ன? விதைப்புத் தழை உரம் என்பது 
  • தழை உரத் தாவரங்களை நிலங்களின் வரப்புகளிலோ, ஊடுபயிராகவோ அல்லது முக்கியப் பயிராகவோ வளர்க்கும் முறையைக் குறிக்கிறது. எ.கா. சணப்பை, காராமணி, பச்சைப்பயிறு
4. மரபியல் மற்றும் செல்மாபியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான பயிர்பெருக்க முறைகள் யாவை? 
  • மரபியல் மற்றும் செல்மரபியல் கோட்பாடு களின் அடிப்படையில் உருவான பயிர் பெருக்க முறைகளான தேர்ந்தெடுத்தல், அறிமுகப்படுத்துதல், கலப்பு செய்தல், பன்மடியம், சடுதி மாற்றம், திசு வளர்ப்பு மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் போன்ற தொழிநுட்பங்கள் பயிர் இரகங்களை மேம்படுத்த இவ்வகை பயிர்பெருக்க முறைகள் பயன்படுகின்றன.
5. தழையிழை உரம் என்றால் என்ன? 
  • தழையிலை உரம் என்பது தாவரங்களின் இலைகள், கிளைகள், சிறு செடிகள் புதர் செடிகள், தரிசு நிலங்களிலுள்ள தாவரங்கள் வயல்வெளிகளின் வரப்புகளிலுள்ள தாவரங்கள் போன்றவற்றைக் குறிக்கும்.
8. கலப்புயிரி என்றால் என்ன?
  • மரபணு வகையத்தில் வேறுபட்ட இரண்டிற்கு வேறுபட்ட தாவரங்களைக் கலப்புறச் செய்யும் முறைக்குக் கலப்புறுத்தம் என்று பெயர். இம்முறையில் தோன்றும் வழித்தோன்றலுக்குக் கலப்புயிரி என்று பெயர்.
6. அட்டோமிட்டா இரக அரிசி – குறிப்பு வரைக 
  • இது உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட அரிசி இரகம்
  • இது கதிரியக்கத்தினால் சடுதி மாற்றமுற்ற அரிசி உவர் தன்மை எதிர்ப்புத் தன்மை காணப்படுவதால் உப்புப்பாங்கான நிலங்களில் பயிரிடத் தகுந்தது.
7. IART -உருவாக்கிய சில காய்கறி இரகங்களின் பெயர் தருக
  • அதிக வைட்டமின் A சத்துடையது – பூசணி
  • அதிக வைட்டமின் C சத்துடையது – மேம்படுத்தப்பட்ட பாகற்காய் கடுகு, தக்காளி
  • இரும்பு மற்றும் கால்சியம் சத்துடையது – மேம்படுத்தப்பட்ட பசலை
  • அதிக புரதச் சத்துடையது – மேம்படுத்தப்பட்ட பீன்ஸ், அவரை, பிரெஞ்சு பட்டாணி& தோட்டப்பட்டாணி
8.அயல்பன்மடிமம் என்பது யாது?
  • அயல்பன்மடியம் (Allopolyploidy) என்பது வேறுபட்ட இரண்டு சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட குரோமோசோம் தொகுதிகளைப் பெருக்கமடையச் செய்யும் முறையாகும். எ.கா. டிரிட்டிகேல் (டிரிடிகம் டுரம் X சீகேல் சீரியல்). ரஃபனோ பிராசிகா (பிராசிகா ஒலரேசியா X ரஃபானஸ் சட்டவஸ்).
9.பர்பராணி கிராந்தி என்றால் என்ன? 
  • வெண்டை தாவரத்தின் மஞ்சள் தேமல் வைரஸ் நோயை எதிர்க்கும் திறனானது காட்டுச் சிற்றினத்திலிருந்து பெறப்பட்டு ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் என்ற ஒரு புதிய இரகமாக உருவானது. இது பர்பராணி கிராந்தி என்றழைக்கப்படுகிறது.
10. விதை உருண்டைகள் என்பது யாது?
  • வடிதன்மை அற்றமந்தப் பொருட்களைப் பசையின் உதவியுடன் உயிர்செயல் வேதிப்பொருட்களையும் சேர்த்து விதையைச் சுற்றிப் பூசி உருண்டைகளாக்குவதற்கு விதை உருண்டைகள் என்று பெயர்.
  • இம்முறையில் விதைகளின் எடை, அளவு. வடிவம் போன்றவை அதிகரிக்கின்றன.

12th Botany PURE SCIENCE Guide 9th Lesson 3 Marks

1.தன்படிமயமாதல் என்றால் என்ன? 
  • தன்பன்மடியமாதல் (autopolyploidy) என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது. எ.கா. பீட்ரூட், ஆப்பிள், போன்றவற்றின் மும்மய
  • பன்மடிய நிலையானது வீரியத்தையும், களி, வேர், இலை, மலர் போன்றவற்றின் அளவை. பெரிதாகவும், அதிக அளவு களிகளின் எண்ணிக்கை மற்றும் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கின்றன.
2.பயிர் பெருக்கத்தின் முக்கிய படிநிலைகள் யாவை?
3.கடினமாக்கல் விதை நேர்த்தியின் பயன்கள் யாவை?
  • விளைச்சல், வேர் வளர்ச்சி, முளைப்புத்திறன் வீரியம் போன்றவற்றை உயர்த்துகிறது.
  • நாற்றுகளைச் சீரான முறையில் முளைக்கச் செய்கிறது.
  • பூக்கும் பருவத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே எய்தச் செய்கிறது.
  • சீரான விதை உற்பத்தி மற்றும் முதிரச்சியை உண்டாக்குகிறது.
  • வறட்சியைத் தாங்கும் திறனை விதைகளுக்கு அளிக்கிறது.
4. விதைப்பூச்சு – வரையறு.
  • விதைபூச்சு என்பது விதையை எருவிலோ, வளர்ச்சி ஊக்கிகளைக் கொண்டோ, ரைசோபியம் காரணிப்பொருள், ஊட்டச்சத்து பொருள். எதிர்க்கும் பொருள், வேதிப்பொருள், பூச்சிக் கொல்லிகள் போன்ற பொருட்களைக் கொண்டு அடர்த்தியாக விதையின் மேல் பூசுவதாகும். விதைகளின் மேல் பசையின் மூலம் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விதையின் முளைப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றன.
5. நோய் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களை அட்டவணைப்படுத்து.
பயிர்

  1. கோதுமை
  2. பிராசிகா
  3. காராமணி
  4. காலிஃபிளவர்
  5. மிளகாய்

இரகங்கள்

  1. ஹிம்கிரி
  2. பூசா சுவர்னிம் (கரராய்
  3. பூசா கோமல்
  4. பூசா சுப்ரா, பூசா ஸ்னோபால் K-1
  5. பூசா சடபஹர்

பூச்சி/சிறு பூச்சி

  1. இலை மற்றும் பட்டைத்துரு, ஹில் பண்ட்
  2. வெண் துரு
  3. பாக்டீரிய அழுகல்
  4. கருப்பு அழுகல் மற்றும் சுருள் கருப்பு| அழுகல்
  5. மிளகாய் மொசைக் தேமல் வைரஸ், புகையிலை தேமல் வைரஸ் மற்றும் இலைச்சுருள்
6.பியூவிரியா – வரையறு.
  • பியூவிரியாசிற்றினம் என்பது உலகெங்கிலும் மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி (entomom-pathogenic) பூஞ்சையாகும்.
  • இவை பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர்டைன் நோயைத் தாவரத்தின் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு ஏற்படுத்துகின்றன.
  • இது ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படுத்தப்படும் நாற்றுமடிதல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
7.விதை பாதுகாப்பு வகைகள் யாவை?
விதை பாதுகாப்பு
  • ஈவார்ட் (1908) வாழ்நாளின் அடிப்படையில் |விதைகளை மூன்று வகையாக வகைப்பாடு செய்தார்
நுண்ணுயிர்தன்மை
  • விதையின் வாழ்நாளானது 3 வருடத்திற்கு மிகாமலிருத்தல்
இடை உயிர்தன்மை
  • விதையின் வாழ்நாளானது 3 முதல் 15 வருடத்திற்கு மிகாமலிருத்தல்.
பெருஉயிர்தன்மை
  • விதையின் வாழ்நாளானது 15 முதல் 1000 வருடத்திற்கும் மேலாக இருத்தல்.
8.விதைச்சான்று – சிறுகுறிப்பு வரைக. 
  • தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய விதைப் பெருக்கம் மற்றும் உற்பத்திக்கான சட்டபூர்வமான அல்லது சட்டமயமான முறையே விதைச்சான்றாகும். விதைகளைப் பராமரித்து அவற்றைப் பொதுமக்களுக்கு அளிப்பதே இத்தரச்சான்றின் நோக்கம்.
  • மரபு அடையாளத்துடன் கூடிய கலப்படமற்ற பட்டியலிடப்பட்ட இரகங்களைத் தரம் வாய்ந்த விதைகள் மற்றும் பெருக்கத்திற்கான பொருட்கள் மூலம் வளர்த்து விநியோகிக்க இத்தரச்சான்று பயன்படுகிறது.
9. தேசிய தாவர மரபியல் வளத்துறையின் தலைமையகம் மற்றும் மண்டல நிலையங்கள் எங்கு அமைந்துள்ளது?
  • தேசியத் தாவர மரபியல் வளத்துறை (Nation Burea of Plant Genetic Resoure-NBPGR), இது நமது நாட்டிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பயிர் இரகங்களை அறிமுகப்படுத்திப் பராமரிக்கிறது.
  • இதன் தலைமையகம் புதுதில்லியிலுள்ள இரங்கபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • இது அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, சென்னை (மீனம்பாக்கம்) ஆகிய நான்கு மண்டல நிலையங்களைக் கொண்டுள்ளது.
10. விதை நேர்த்தி முறை மற்றும் அதன் பயன்களை யாவை?
  • வேளாண்மையிலும், தோட்டக்கலைத் துறை யிலும் விதை நேர்த்தியானது வேதிப்பொருட்களைக் கொண்டு முக்கியமாக எதிர்நுண்ணுயிரி அல்லது பூஞ்சைக் கொல்லிகளை நடவுக்கு முன் இட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

விதைநேர்த்தியின் பயன்கள்:

  • தாவரங்களில் நோய்கள் பரவுவதைத் தடுக்கிறது.
  • நாற்றுக் கருகளிலிருந்து விதைகளைப் பாதுகாக்கிறது.
  • முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
  • சேமித்து வைத்திருக்கும் தானியங்களைப்
  • பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
  • மண்ணிலுள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
11. அசோலா பற்றி குறிப்பு தருக. 
  • அசோலா என்பது மிதக்கும் நீர்வாழ் பெரணி ஆகும்.
  • இது நைட்ரஜனை நிலைநிறுத்தும் நீலம் பசும் பாசியான அன்பீனா அசோலாவுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
  • நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
  • நெல்பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா விரைவாக சிதைவடைந்து நெற்பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கிறது.

12th Botany PURE SCIENCE Guide 9th Lesson 5 Marks

1. பாரம்பரிய விதை பாதுகாப்பு முறைகளை எழுதுக.
  • குறுகிய காலச் சேமிப்பிற்கு விதைகளுக்கு நுண்ணிய செம்மண், குண்டூர் மிளகாய்பொடி, வேப்பிலை பொடியாலும் பாகற்காய் பொடியாலும், முருங்கைக்காய்ச் சாறு மற்றும் புங்கை இலைச் சாறு போன்றவை பாரம்பரியமாக விதைப்பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.
  • நெல்விதைகளை 1 : 10 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட்ட உப்புநீரில் ஊறவைத்து, அதில் மிதக்கும் பதர்களை நீக்கி நிழலில் உலர்த்தி ஒன்று முதல் இரண்டாண்டுகள் வரை சேமிக்கப்படுகிறது.
  • சோள விதைகள் சுண்ணாம்பு நீரில் (1 கி சுண்ணாம்பு + 10 லி நீர்) பத்து நாட்கள் ஊறவைத்து அலசிப் பின்னர் உலர்த்திச் சேமித்து வைக்கப்படுகிறது.
  • கொண்டைக்கடலை விதைகள் எலுமிச்சை இலை எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், சோயா எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் (100) கிலோ விதைக்கு 500 மி.லி எண்ணெய்) ஆகிய கலந்து சேமித்து எண்ணெய்க் கலவையில் வைக்கப்படுகிறது.
  • சூரியகாந்தி விதைகள் உலர்ந்த விதை நீக்கப்பட்ட பீர்க்கங்காயின் உள்ளே வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இக்காய்கள் காற்று புகாத கலன்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
2. வேளாண் தொழிலில் நானோ தொழில் நுட்பத்தின் பயன்கள் யாவை?
  • பல்வேறு நுண்மையான கருவிகளைக் கொண்டு வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம் பலமுன்னேற்றங்களை ஏற்படுத்துவதில் தனிப்பங்கு வகிக்கிறது.

1.நுண் உயிரி – உணர்வி

  • இதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்தின் நிறையையும் ஈரப்பதத்தையும். கண்டறியலாம்

2. நுண்ணுரங்கள் + நுண்களைக்கொல்லிகள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள்

  • பெற நுண்தொழில் நுட்பம் உதவும்.

3.சூழல் பாதுகாப்பு, சூழல் நீள் நிலைத்தன்மை பொருளாதார நிலைத்தன்மை – போன்றவற்றின் மூலம் பயிர்விளைச்சலில் பெரும் பங்கு வகிக்கிறது.

Leave a Reply