You are currently viewing PG TRB Psychology Notes Unit 6 Part 4 

PG TRB Psychology Notes Unit 6 Part 4 

PG TRB Psychology Notes Unit 6 Part 4 

பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சியின் 4 படிகள்

PG TRB Unit 4 Important Notes for PG TRB Exams, B. Ed., D. TEd., exam points.

PG TRB Psychology Notes Unit 6 Part 4 PG TRB Psychology Notes Unit 6 Part 4 பியாஜேயின் அறிதல் வளர்ச்சி படிநிலைக் கோட்பாடு (Jean Piaget’s theory of cognitive Development)

 • அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசைக்கிரமமாக அமைந்த பல படிநிலைகளில் நிகழ்கிறது. (4 வளர்ச்சி நிலைகள்)
 • மனிதனிடம் இயல்பாகவே இரு அடிப்படைப் போக்குகள் இருப்பதாக பியாஜே கூறுகின்றார். aching இவை ஒருங்கிணைத்தல் & இணங்குதல் ஆகும். (Organisation and adaptation)
 • இணங்குதலில், பொருந்துதல் & தன்வயப்படுத்தல் (Accomodation & assimilation) ஆகியன காணப்படுகின்றன.
 • மாறாச் செயல்கூறுகள் (அ) செயல்படுமாறிகள் (Functional invaiants ) பியாஜே என்பவர் ஒருங்கிணைத்தல் மற்றும் இணங்குதல் ஆகிய இரண்டையும் எனக்குறிப்பிடுகிறார்.

 

பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சியின் 4 படிகள்:

I. புலன் இயக்க நிலை (Sensory – Motor Stage) (0-2 vrs) :

 • புலன்களை பயன்படுத்தி வெளியுலகை அறிகிறது.
 • மொழியை பயன்படுத்தத் தெரியாது (no verbal)
 • குறியீடுகளை பயன்படுத்த தெரியாது (no symbols)
 • பொருள்களின் நிலைத்த தன்மை பற்றி அறிகிறது. (object performance)

11. முன்செயல் பாட்டு நிலை (Pre-operational stage) (2 to 7yrs)

 • பிம்பங்கள் (Images) அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • மொழி வளர்ச்சி தொடங்குகிறது (verbal stage)
 • Ego-centric (தன்னை மையமாகக் கொண்டே சொற்களுக்கு பொருள் காணுதல்)
 • Animism (உயிரற்ற ஜடப் பொருள்களையும் உயிருள்ள வகளாக பாவித்தல்
 • No Coservation (பொருள்களின் அளவு மாறாத் தன்மை உணரப்படாத)
 • No Reversebility முன்பின் மாற்றம் இருக்காது.) இந்த பிரிவின் மற்ற இரு உட்பிரிவுகள்
 • முன் கருத்து உருவாதல் நிலை (Preconceptua stage) 2 to 4 yrs. உளக்குறியீடுகளை உணர்கிறது. இதனை பியஜே குறியீடுகள் (Signifiers) எனக் குறிப்பிடுகிறார்.
 • உள்ளுணர்வு நிலை (Intuitive stage) 4-7yrs
 • Centring ஒரு சமயத்தில் ஒரு பொருளின் ஒரு பண்பினை மட்டும் அறிதல்)
 • Realism (பொம்மைகளை உண்மையானவை என உணர்தல்)

III. புலனீடான செயல்நிலை (Concrete Operational Stage) 7 to 12yrs

 • Decentring ஒரே சமயத்தில் பலபண்புகளை பற்றி சிந்திக்க முடிகிறது)
 • Reversebility (முன்பின் மாற்றம்), Conseration (பொருள்களின் அளவு மாறாத்தன்மை)
 • வகைப்படுததல், வரிசைப்படுத்தல் (Ordering) இடம் காலம் சார்ந்த தொடர்புகளில் தெளிவு காணப்படுகிறது.
 • Compensaion (ஈடு செயதல்). Identity (தனித்துவம்)

 

IV. முறையான செயல்நிலை (பருப்பொருட் நிலை) – Concrete operational stage (12yrs and above)

 • புலன் தொடர்பற்றவை (Abstractness) பற்றி சிந்திக்க முடிகிறது.
 • ஆய்வுக்கான (Reasoinig) கருது கோள்களை (hypothesis) உருவாக்கும் திறன் எழும்.
PG TRB Psychology Notes Unit 6

 

சிந்தனையும், மொழியும் (Thinking and Language)

 • மொழியென்பது தனது எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மனிதனால் வகுக்கப்பட்ட குறிகள் (அ) அடையாளங்களை (signs or symbols) கொண்ட ஒரு தொகுப்பாகும்.
 • பின்பற்றல் (Imitation). வலுப்படுத்தல் (Reinforcement) போன்றன குழந்தைகளின் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்கு பெறுகிறது.

மொழிசார் மனவியல் (Psycho Lingusiticvs)

 • உள மொழியியல் என்பது மொழி மற்றும் உளவியல் முறைகளையும் பயன்படுத்தி மொழித் திறனைப் பெற்று அதனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உளநிகழ்ச்சி (அ) செயல்களைக் குறிப்பிடுவதாக அமைகிறது.
 • “Psycho linguistic” என்ற சொல்லை ஆஸ்குட் (Osgood) மற்றும் செபியோக் என்பவர்கள் பிரபலபடுத்தினர்.
 • சோம்ஸ்கி (Neom Chomsky) உளமொழியியனுடன் தொடர்புடையவர்.
 • எல்லா மொழிகளும் சில குறிப்பிட்ட வோரிமஸ் (Phoremnas) என்ற அடிப்படை ஒலிகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
 • மொழியில் உள்ள எளிய பொருள் தரக்கூடிய அமைப்பு மார்பீம்ஸ் (Morphemas) எனப்படும். எ.கா. வேசு. புதுமை, என்பவை தனித்த மார்பீம்கள்

அழகுணர் கற்பனையின் வளர்ச்சி நிலைகள் :

 • பாவனை நிலை
 • கனிவு நிலை
 • குறிக்கோள் நிலை

துருவிப் பார்க்கும் சிந்தனையை வரையறை செய்தவர் :

 • ஹல்பர்ன் (or) நெறிப்படுத்தப்பட்ட சிந்தனை

துழவிப் பார்க்கும் சிந்தனை ஜான்டூயி (1937)

சிந்தனை (Thinking)

 • அறிதிறன் செயல்களில் முக்கியமானதாகும்.

சிந்தனையின் கருவிகள் (Tools or Instruments of Thinking)

 • 1. பிம்பங்கள் (Images)
 • 2. கருத்து (Concepts)
 • 3. குறியீடுகள் (Symbols and signs)
 • 4.மொழி (Language

வகைகள்:

 • 1. புலன் காட்சி சிந்தனை (Perceptual or concrete thinking)
 • 2. பொதுமை கருத்துச் சிந்தனை (Conceptual or Abstract)
 • 3. தர்க்க சிந்தனை (Reflective or logical thinking )

-இதனை குவிசிந்தனை (convergent Thinking) எனலாம்.

 • 4. உருவாக்கும் சிந்தனை (Creative thinking) இதனை Divergent thinking (விரி சிந்தனை) எனலாம்

Eg விஞ்ஞானிகள். கண்டுபிடிப்பாளர்கள். கவிஞர்கள் etc.

கற்பனை (Imagination)

 • பிம்பங்கள் (or) சாயல்களின் துணை கொண்டு நிகழும் சிந்தனை கற்பனை (Imagination) எனப்படும். ஆக்கத்திறனுடன் (Creativity) கற்பனை தொடர்புடையது

வகைகள்:

1. மீள் ஆக்கக் கற்பனை (Reproductive imagination) நினைவுபடுத்திக்கொள்ளுதல் (எந்தவித மாறுதல் ஏதுமின்றி)

2. ஆக்கக் கற்பனை (Productive Imagination)

அ. பின்பற்றும் ஆக்கக் கற்பனை (Imitative imagination) படைப்புக் கற்பனை (Creative imagination)

 • 1. பயன்வழிக் கற்பனை (Pragmatic imagination) இது கட்டுப்பாடு கொண்டது எ.கா. விஞ்ஞானி.
 • அழகுணர் கற்பனை (Aesthetic) கட்டுப்பாடற்றது. எ.கா. கவிஞன். கலைகுன் (இசை. அழகு. ஓவியம் etc… )

ஆய்வுத்திறன் (Reasoning)

 • ஆய்வு என்பது புதிர் தீர்த்தல் (or) பிரச்சனைக்கு விடை காணல்(Problem solving)

1. Inductive Reasoning (தொகுத்தறிதல் ஆய்வுத்திறன்)

 • சிறு சிறு நியதிகளிலிருந்து ஒரு பொது (or) கோட்பாட்டை ஊகித்தலாகும். எ.கா. Ram is mortal (நாம் சாகக் கூடியவன்)
 • Karim is mortal (கரீம் சாகக்கூடியவன்)

இவற்றிலிருந்து “All men are mortal” (மனித இனமே சாகக்கூடியது) என்ற பொது விதியை உருவாக்கலாம்

2. Deductive Reasoning (பகுத்தறிதல் ஆய்வுத்திறன்).

 • பொது விதியை ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குப் பயன் படுத்துதல். எ.கா. All men are mortal.; I am a man
 • I am mortal

Problem Solving (பிரச்சினைக்குத் தீர்வு காணல்) → புதிர்நிலையை “கிளைவழிநிலை” என்று

ஜான்டூயி அழைக்கிறார்

ஜான் டூயி 5 படிகளை குறிப்பிடுகிறார்.

 • 1. Awareness of the problem (பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு)
 • 2. Collecting and organizing (தகவல்களை சேகரித்தல்)
 • 3. Formulating hypothesis (கருது கோள்களை உணர்தலின் உட்கூறுகள் உருவாக்குதல்)
 • 4. Evaluation & Verification (சரிபார்த்தல்) 

 • 5.Formulation of a generalization (பொதுமைப்படுத்தல் ) அறிதலை அறிந்துணர்தல் என்னும் கருத்து ஜான்ப்ளேவல் (1979) அறிமுகப்படுத்தியவர்.

சிந்தனையை பாதிக்கும்க் கருவிகள்:

 • 1.நுண்ணறிவின் குறைந்த அளவு (Poor intelligence)
 • 2. போதிய பொதுக் கருத்துக்களை பெற்றிராமை (absence of sufficient concepts)
 • 3. தவறாக சிந்திக்கும் பழக்கம்
 • 4. சொற்களஞ்சிய அளவு குறைந்து காணப்படல்
 • 5.சார்பெண்ணங்கள் (Prejudices) சிந்தனையில் குறுக்கிடல் etc.

Aptitude (நாட்டம்)

 • குறிப்பிட்டத் துறையில் ஆர்வமும், திறனும் மிகுந்திருத்தல் நாட்டம் (Aptitude) எனப்படும். i.e.நாட்டம் (Aptitude) என்பது திறன் (capacity) + ஆர்வம் (Interest) நாட்டம் வரையறை செய்தவர்கள் பின்ஹாம், டிராக்ஸலர், ஹல் மேலும், நாட்டம் + பயிற்சி (Training) = தேர்ச்சி அல்லது அடைவு (Achievement)

முன்னறி சோதனைகள் (Prognostic Test)

 • ஒருவர் ஒரு துறையில் எந்த அளவு வெற்றி பெறுவார் என்பதை முன்கூட்டியே அறிய உதவும் சோதனையாகும்.

அடைவு சோதனை (Achievement test)

 • பயிற்சியளிக்கப்பட்டபின் கொடுக்கப்படும். அடைவு சோதனையின் மூலம் ஒருவரது நிகழ்கால திறனளவு அறியப் படுகிறது. i.e. பயிற்சிக்குப்பின் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் காட்டுவது அடைவு சோதனை.

நாட்டச் சோதனைகள்

 1. ஸீ ஷோரின் இசை நாட்டச் சோதனை
 2. பொறியியல் நாட்டச் சோதனைகள் (Mechanical Aptitude test)
 3. பல் நாட்டச் சோதனை (Differential Aptitude test) 8 உள் சோதனைகள் உள்ளன. i.e. 1947ல் உருவாக்கப்பட்டு 1963ல் திருத்தியமைக்கப்பட்டது

1)சொல் ஆய்வு

2).எண்ணாற்றல்.

3).கருத்தியல் ஆய்வு.

4).இடத்தொடர்புகள்.

5).பொறியியல் ஆராய்ந்தறிதல்.

6). எழுத்தர் தொழிலுக்கான வேகமும், துல்லியமும்,

7). மொழியை கையாளுதல் (சரியான எழுத்துக்களைப் பயன்படுத்தல்).

8).மொழியை கையாளுதல் (வாக்கியத்தில் தவறை சுற்றிக்காட்டுதல்)

நாட்டச் சோதனையின் பயன்

 • குறிப்பிட்ட தொழிற்பயிற்சி அல்லது பாடத்துறைக்கான மாணவர்களையும், ஆசிரியர்களையும் தேர்ந்தெடுக்க.

கவர்ச்சிகள் (Interest)

 • ஒரு பொருளுடனோ அல்லது ஒரு செயலிலோ முழுமையாக ஒருவன் ஒன்றிப்போதல் அதில் அவனது கவர்ச்சியைக் குறிக்கும்.

முதிர்ச்சி (Maturity)

 • நிலைக்கு ஏற்ப கவர்ச்சிகள் மாணவர்களிடையே காணப்படுகிறது. இவற்றில் பொருளாதார நிலை, இனம் போன்றவற்றின் அடிப்படையில் வேற்றுமைகள் காணப்படுகின்றன.

சோதனைகள்

1. கூடர் என்பாரது விருப்ப வரிசை (Kuder Preference Record)

 • 9 உட்துரைகள் உள்ளன. (எ.கா. பொறியியல், விஞ்ஞானம்)
 • 9 முதல் 16 வயது வரையிலானோர்க்கு இச்சோதனையை அளிக்கலாம்.
 • ஒரு தொகுதிச் சோதனையாகும்.

2. பிரெஸ்ஸி என்பாரது கவர்ச்சி மனப்பான்மை சோதனை (Pressyls Interest Attitude scale)

3. ஸ்டிராங் என்பாரது தொழிற் கவர்ச்சிப் பட்டியல் (Strong’s vocational Interest Blank)

4. 1927ல் வெளியிடப்பட்டு 1931ல் திருத்தியமைக்கப்பட்டது

5. இதில் 28 தொழில்களும் 11 பிரிவுகளும் உள்ளது

6. 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இப்பட்டியலில் 400 உருப்படிகள் உள்ளன.

7. ரோஸ்னோ, ராபின்சன் (1967) அபிப்பிராயம் பற்றிய கருத்தினை வெளியிட்டனர்

பயன்:

1. மாணவர்களுக்குப் பணி வழி காட்ட எபிம்சன், யிங்கள் (1965) மனப்பான்மைக்கும், சார்பெண்ணத்திற்கும் உள்ள வேற்றுமையை குறிப்பிடுகின்றனர்

2. பணிகளுக்குப் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்க

மனப்பான்மை (Attitude)

 • மனப்பான்மை என்பது ஒருவர் தமது சூழ்நிலைக் கூறுகளான மனிதர்கள். பொருள்கள், கருத்துக்கள் ஆகியவைகளுக்கு கற்றலின் விளைவாக, குறிப்பிட்ட துலங்களை நிகழ்த்துவதற்கான தயார் நிலையைக் குறிக்கிறது.

மனப்பான்மை வரையறை தந்தவர்கள்:

ஆல்போர்ட், எஸ்டேக்னர்

மனப்பான்மையை அளவிடுதல் (Measuring Attitude)

1. தர்ஸ்டன் முறை (Thuurstone)

 • ஆய்வுகளின் மனப்பான்மை அளவு கோலை உருவாக்கி, ஒரு கருத்து நிறுவனம். செயல்முறை

(அ) பொருள் பற்றிய மனப்பான்மையை அளவிடுகிறார்கள்.

2. லிக்கர்ட் முறை (Likert)

பெரிதும் பயன்படுத்தப்படும் முறையாகும். மனப்பான்மை அளவுகோலில் பிரச்சனை பற்றி கொடுக்கப்பட்டிருக்கும்.

அளவுகோல்

 • மிகவும் ஏற்கிறேன். ஏற்கிறேன். ஒன்றும் சொல்வதிற்கில்லை. எதிர்க்கிறேன். மிகவும் எதிர்க்கிறேன்.

மதிப்பெண்

 • நேரிடைக் கருத்துகளுக்கு : 5, 4, 3, 2, 1
 • எதிரிடைக் கருத்துகளுக்கு : 1, 2, 3, 4, 5

மொத்த மதிப்பெண் மூலம் ஒருவரது மனப்பான்மை அளவிடப்படுகிறது.

Leave a Reply